புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மனிதம் போற்றும் மதநல்லிணக்கம்

240

ஆவுடையார்கோவில் தாலுகா சேமங்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பூரண புஷ்ப கலை ஸ்ரீராக்காச்சி அம்மன் ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நாளை (7/9/2021) கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியர்கள் மத நல்லிணக்கம் ஏற்படுத்தும் விதமாக கோவிலுக்கு சீர் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா சேமங்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பூரண புஷ்ப கலை ஸ்ரீராக்காச்சி அம்மன் ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு

அதே ஊரில் அரசனாகரிபட்டினம் கிராமத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாகபள்ளிவாசல் இருந்து கோவிலுக்கு வான வேடிக்கையுடன் நடந்து சீர் கொண்டு சென்றனர் மற்றும் அங்கு நாளை நடைபெற உள்ள 15000 பேருக்கு அன்னதானத்திற்க்கு 50 மூட்டை அரிசி அரசனாகரிபட்டினம் ஜமாத்தார்கள் கொடுத்து சிறப்பித்தனர் மற்றும் இளைஞர்கள் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் மற்றும் ஊரில் நுழைவாயில் ஜமாத் என்ற பேனர்களும் வைத்திருப்பது காண்போர்களை நெகிழ்ச்சி அடைய செய்கின்றது