விபத்து : அறந்தாங்கி அருகே இருவர் உயிரிழப்பு

1079

அறந்தாங்கி தாலுகா நாகுடி சரகம் மற்றும் வட்டம் களக்குடி தோப்பு அருகில் மேல்மங்கலம் வட்டம் கம்பசேரி கிராமத்தைச் சேர்ந்த ராமு த.பெ.ரெத்தினஆக்கினார், ராஜகுரு த.பெ.ராஜேந்திரன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிலிருந்து பெட்ரோல் போட்டு விட்டு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி திரும்பி வந்தபோது அறந்தாங்கி_கட்டுமாவடிசாலையில் சென்று கொண்டிருந்த போது கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா சுகாதாரத் துறைக்கு சொந்தமான என்ற பொலிரோ ஜீப் டயர் வெடித்து மோதியதில் மேற்படி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

பொலிரோவில, ஓட்டுனர், இளநிலை உதவியாளர் மற்றும் மூவர் மொத்தம் ஆறு நபர்களுடன் சென்றுள்ளனர். மேற்படி நபர்களுக்கு பாதிப்புகள் ஏதும் இல்லை.

இறந்த நபர்களின் உடல்கள் ஆம்புலன்ஸில் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்டுள்ளது. காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..