வங்கியில் பணம் எடுப்பவர்களை குறி வைத்து கொள்ளை; கணவன், மனைவி, மாமனார் கைது

552

வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த 5 மாதங்களாக வங்கிகளில் பணம் எடுப்பவரை குறி வைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து வந்தனர்.

இதுகுறித்து புகார் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வேட்டைக்காரன் இருப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் வேதாரண்யம் பகுதியில் வங்கியில் பணம் எடுப்பவர்களை குறி வைத்து கொள்ளையடித்த கொள்ளை கும்பல் இவர்கள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

வேதாரண்யம் பகுதியில் வங்கியில் பணம் எடுப்பவர்களிடம் கொள்ளையடித்து கணவன் கார்த்திக் (33), மனைவி காயத்திரி (32), மாமனார் கணேசன் (60) ஆகிய 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.