பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை!

209

விராலிமலை அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் 454, 392,506(1) ஆகிய பிரிவுகளுக்கு மொத்தம் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

தண்டனைகளை ஒன்றின் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவுரப்பட்டியை சேர்ந்தவர் லலிதா இவரது மகள் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த
27-12-2001 ஆம் ஆண்டு லலிதா மற்றும் அவரது கணவர் கூலி வேலைக்கு சென்றுள்ளனர் அப்போது வீட்டில் தனியாக இருந்த இவர்களது மகள் 15 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வரும் குழந்தைவேல் என்பவர் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து
குழந்தைவேலுவை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது . இன்று இந்த வழக்கை விசாரணை செய்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக குழந்தைவேல்வுக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் 454, 392,506(1) ஆகிய பிரிவுகளுக்கு மொத்தம் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார்.

தண்டனைகளை ஒன்றின் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் மேலும் 2.51 லட்சம் (இரண்டு லட்சத்து 51 ஆயிரம்) அபராதம் விதித்து நீதிபதி முனைவர். சத்தியா உத்தரவு

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 7.50 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.