தமிழக கிரிக்கெட் அணிக்கு காரைக்குடி மாணவி தேர்வு.

316

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 5வது வீதியில் வசித்து வரும் பாலமுருகன் மகள் பிரியதர்ஷினி. இவர் அழகப்பா மெட்ரிகுலேஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் .கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ள இவர் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பயிற்சியாளர் வரதராஜனிடம் பயிற்சி பெற்று வருகிறார். வலது கை லெக் ஸ்பின்னர் ஆல் ரவுண்டர் ஆன இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் 16 வயதிற்கு உட்பட்டோர் அணிக்கான தேர்வில் கலந்து கொண்டார்.

நேற்று வெளிவந்த அணி தேர்வு முடிவில் மாணவி பிரியதர்ஷினி 15 வயதிற்குட்பட்டோருக்கான ரவுண்டு ராபின் போட்டிகளுக்காக தமிழ்நாடு பெண்கள் அணிக்கு தேர்வாகியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சார்பில் தமிழ்நாடு பெண்கள் அணிக்கு தேர்வான முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெறும் ரவுண் ராபின் போட்டிகளில் விளையாட உள்ளார். சாதனை படைத்த மாணவி பிரியதர்ஷினி சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர் வரதராஜன் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்தினார்கள் .