ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டம் – தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்

304

எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்

மனித வாழ்வில் அன்றாட நிகழ்விற்க்கும் சரி நாளை வரப்போகும் நிகழ்விற்கும் சரி இப்புடி இருந்தால் என்ன?

அப்புடி இருந்தால் என்ன ? என்ற எதிர்பார்ப்பிலே நாட்கள் செல்கிறது

குறிப்பாக நம்மை மிஞ்சிய எதிர்ப்பார்ப்புகளால் நமக்கே

ஆபத்தும் ஏற்படுகிறது. நம்மில் பெரும்பாலும் மாதம் பத்தாயிரம், பதினைந்தாயிரம் சம்பளத்தை வாங்கி ரூம் வாடகை கரண்ட் பில் சாப்பாட்டு செலவு போக மாதம் மூவாயிரம் முதல் நாளையிரம் வரையில் நம் கையில் நிற்கும் (தேவையற்ற செலவுகளை தவிர்ப்பவர்களுக்கு)

அதை வைத்து ஒரு சிலரின் பேரார்வத்தால் பல இடங்களில் முதலீடு செய்கின்றார்கள் அதுவும் குறிப்பாக பேன்டசி விளையாட்டுகளில் அதிகம் செலவழிக்கிறார்கள். குறிப்பாக ஆன்லைன் விளையாட்டான ரம்பி, ட்ரீம் லெவன்

என்ற பல விளையாட்டுகளில் அந்த மீதி இருப்பை வைத்து

விளையாடி லட்சக்கணக்கில் வென்றோரும் உள்ளனர்

தோற்றோரும் உள்ளனர் .

எதுவாக இருந்தாலும் அளவோடு இருக்கவேண்டும் நம் வயிற்றுக்கு அன்னமாய் இருந்தாலும் அளந்து

சாப்பிடவேண்டும் என்ற கருத்து உள்ளது! அதற்க்கு தகுந்த படி நமது செலவுகளை தேவையரிந்து

செய்ய வேண்டும்

மிச்சம் உள்ள 1 ரூபாயை அந்த மாதத்தில் சேமித்தாலும் நமக்கு நன்மையே !

ஆன்லைன் விளையாட்டுகளால் உள்ள ஆபத்துக்கள்:

நமக்கான நேரத்தை சாப்பிட்டு விடும் தேவையில்லாத டென்சன் தலைவலி தூக்கமின்மை, உறவுகளிடம் நேரம் செலவிடவது குறைவு ஏமாற்றம்

குறிப்பாக நாம் உழைத்து சிறுக சிறுக சேர்த்த காசு

மொத்தமா போகும் போது ஒரு வலி, கவலை, ஏமாற்றம்

இருக்கே அதை உணர்ந்தவனுக்கு தான் தெரியும் அய்யோ நான் உழைத்த காசு எல்லாம் வேஸ்ட்டா போகுதே னு

அப்படி தோன்றுபவருக்கு அடுத்த முறை அந்த விளையாட்டை விளையாட மனது வராது.

இன்னைக்கி விட்டத நாளைக்கி புடிக்கலாம்னு நினைத்து நினைத்து பல லட்சங்களை இழந்து தற்கொலை செய்து கொண்ட நம் உறவுகளை தினமும் ஒரு செய்தியில் பார்க்கிறோம்

இதையெல்லாம் பார்த்து நம்மில் ஒரு சிலராச்சும் அந்த விளையாட்டுகளில் இருந்து வெளியில் வருவார்கள் என்று நம்பிக்கையோடு !

ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 10.06.2022 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தபடி, இணையவழி சூதாட்டத்தினை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்கள் தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை முதல்-அமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்தது. மேற்கண்ட அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.08.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அக்கூட்டத்தில், இந்த அவசரச் சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதற்கிணங்க அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, இன்று (26.09.2022) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்.