திருமயம் புறக்கணிக்கப்படுகிறதா?

591

ஒவ்வொரு தொகுதியிலும் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை அந்த சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக கொடுக்க சொல்லியுள்ளார் மாண்புமிகு முதல்வர் அவர்கள்

சட்டமன்ற தொகுதியின் தலைமையிடம் தமிழக சட்டத்துறை அமைச்சரின் தொகுதி தாலுகா தலைமையிடம் இவ்வளவு சிறப்பு மிக்க திருமயம்.

108 திவ்யதேசங்களில் ஒன்று ஆகிய சிறப்புகளை தன்னகத்தே கொண்ட திருமயம் நகரில் நீண்ட நாட்களாக அல்ல நீண்ட வருடங்களாக தீர்க்கப்படாத தீர்வு கிடைக்காத மற்றும் அதிகாரிகளின் அலட்சியபோக்கால் சாமானிய மக்கள் திண்டாடி வருவதோடு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பயணபாதையில் பாதுகாப்பை பலப்படுத்திடும் வகையிலான கோரிக்கைகள்

தீவு ஆகிறது திருமயம்

திருமயத்தில் பைபாஸ் சாலை அமைக்ப்பட்ட நாளில் இருந்து பெரும்பாலான அரசு பஸ்கள் இரவு நேரங்களில் திரு மயம் பஸ் ஸ்டாண்டுக்கு வருவதை தவிர்க்கின்றன. இதற்கு தீர்வு காண கடந்த 10 ஆண்டுகளாக சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும்நடவடிக்கை இல்லை

1). திருமயம் நகருக்குள் இரவு நேரத்தில் அரசு பேருந்துகள் வருவதில்லை.

2). 2016- ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்ட அரசு பேருந்து பணிமணை 2022 வரை பூமியிலேயே உள்ளது.

3). திருமயம் – சென்னை- திருமயம் பேருந்து ஆகிய சேவைகளை செய்து தாருங்கள் என 26-02-2019 ம் ஆண்டே தங்களிடம் மனு கொடுத்தோம்

3).திருமயம் – சென்னை- திருமயம் அ.வி.பே 134 U.D 2020ம் ஆண்டு இயக்கப்பட்டு இன்று வரை இரு மார்க்க பேருந்துகளும் திருமயம் வராமல் காரைக்குடிக்கு தான் செல்கிறது.

சட்டமன்ற தொகுதியின் தலைமையிடத்திலிருந்து மாநில தலைநகருக்கு நேரிடையாக பேருந்துகள் இருந்தும் இயக்க மறுக்கிறது காரைக்குடி பணிமணை.

4). புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதியின் தலைமையிடங்கள் சட்டமன்ற தொகுதியின் தலைமையிடங்கள் அல்லாத ஊர்களில் கூட அரசு பேருந்து பணிமணை உள்ளது.திருமயத்தில் மட்டும் இல்லை.

5). புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஊர்களிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களான ஈரோடு கோவை திருப்பூர் சேலம் போன்ற முக்கிய நகரங்களுக்கு நேரிடை பேருந்துகள் உள்ளது. திருமயம் நகர மக்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்

6). திருமயம் – பொண்ணமராவதி – கோவை மற்றும் அறந்தாங்கி – அரிமளம் – திருமயம்- பொண்ணமராவதி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்டது.

கோவை பேருந்தை ஏம்பல் வரை நீட்டித்து ஏம்பல் – அரிமளம் – திருமயம் – பொண்ணமராவதி – கோவை வரை இரு மார்க்கத்திலும்

நிறுத்தப்பட்ட அறந்தாங்கி – திருமயம் – பொண்ணமராவதி பேருந்தை ஆவுடையார்கோவில் – ஏம்பல் – அரிமளம் – திருமயம் – பொண்ணமராவதி வரை இயக்கிட வழி வகை செய்து தாருங்கள்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா சொன்னது போல வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது.

ஆம் அதி அத்தியாவசிய பொது போக்குவரத்து சேவையில் தெற்கில் உள்ள திருமயம் நகரம் மிக மிக பிண் தங்கியுள்ளது

மேற்கண்ட கோரிக்கைகளை செய்து தாருங்கள் என 26-02-2019 ம் ஆண்டே திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த உயர்திரு. S.இரகுபதி அவர்களிடம் மணவாளன் கரை வீரப்பன் சத்திரம் ஊரணி கரையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் மனு கொடுத்தோம்

அதன்பிறகு இன்று வரை மாவட்ட ஆட்சியர்கள் அரசு பேருந்து கோட்ட இயக்குனர்கள் மண்டல மேலாளர்கள் பணிமணைகள் மேலாளர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு என எத்தனை எத்தனையோ மனுக்கள் கொடுத்துவிட்டோம்

இன்றும் இரவு 10 மணி ஆகிவிட்டால் திருமயம் – காரைக்குடி செல்ல வேண்டுமென்றால் புதுக்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி லேனா விளக்கு TOLL GATEல் இறங்கி காரைக்குடி பேருந்துகள் ஏற வேண்டும்.

பகலில் நகருக்குள் வரும் பேருந்துகளை தான் இரவில் நகருக்குள் வர சொல்கிறோம். 1To3, 1 To 5 பேருந்துகளை நகருக்குள் வர சொல்லவில்லை.

காரைக்குடி மண்டல பேருந்துகள் திருமயம் மக்களை மாற்றாந்தாய் மனப்பக்குவத்தில் நடத்துகிறது.சொந்த மாவட்டமான புதுக்கோட்டை பணிமணை திருமயம் பயணிகளை துச்சமாக நினைக்கிறது.

இரவு நேரத்தில் புறவழிசாலையில் பயணிகளை இறக்கி விடும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அவர்கள் குடும்பத்தினர்களை இது போல இறக்கி விட்டு செல்வார்களா

தனியார் நிறுவன பேருந்துகளான அஹமதியா ஓட்டுநர்கள் நடத்துநர்கள் யாரிடமும் போய் சொல்லி கொள் என்கிறார்கள். இதே போல தான் அரசு பேருந்துகளும் எதேச்சதிகார போக்கை கடைபிடிக்கிறது

திருமயம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சருமான மாண்புமிகு S.இரகுபதி அவர்களை3 முறை வெற்றி பெற செய்து 2 முறை அமைச்சராக அமர்த்திய தொகுதியின் தலைமையிடமான திருமயம் நகரை வளர்ச்சியடைய செய்ய தேவையான அதி அத்தியாவசிய பொது போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தி தார வேண்டும் என்ன செய்ய போகிறார் சட்டமன்ற உறுப்பினர்.