CECRI DAY பார்வையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது

100

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று(26-09-2022) பார்வையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு கணிதப் பிரிவு மாணவர்கள் களப் பயணமாக இன்று சிக்ரி சென்று பார்வையிட்டனர். மின்கலம் தயாரிப்பு,கண்ணாடி குடுவைகள் தயாரிப்பு பொன்றவற்றை பேராசிரியர்கள் விளக்கி காட்டினர்.அதனை மாணவர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

களப்பயணத்தை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் துவக்கிவைத்தார். நிகழ்வின் வழிகாட்டி ஆசிரியர்களாக பள்ளி வேதியியல் ஆசிரியை பத்மாவதி தாவரவியல் ஆசிரியர் செந்தில்குமார், இயற்பியல் ஆசிரியர் இராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து வழிநடத்தி சிறப்பித்தனர். இக்களப்பயணம் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்கும் , அறிவியில் ஆராய்ச்சி சார்ந்த சரியான புரிதலையும், ஏற்படுத்படுத்தியதாக மாணவர்கள் கூறினர் .

மாணவர்களுக்கு மதிய உணவை இயற்பியல் ஆசிரியரும் தாவரவியல் ஆசிரியரும் வழங்கி சிறப்பித்தார்கள்.