கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியுள்ளது:

742

தற்போது கன்னியாகுமரி கடல் உள்வாங்கியுள்ளது. மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இன்று அமாவாசை தொடங்க உள்ளதால் கடல் உள்வாங்கியுள்ளது.

அமாவாசை பெளர்ணமி நாட்களில் கன்னியாகுமரி கடல் உள்வாங்குவது வழக்கமான ஒன்றுதான். அதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். கடல் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

தற்போது திருச்செந்தூர் கடலில் எந்த மாற்றமும் இல்லை. பொதுவாக
திருச்செந்தூர் கடல்தான் அடிக்கடி உள்வாங்கும்.ஒவ்வொரு அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களிலும் இக்கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகக் காணப்படும். இந்த நாள்களில் சில மணி நேரம் இக்கடல் நீர் உள்வாங்கி காணப்படும். அதன் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவது வழக்கம்.

திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதற்கு என்ன காரணம் என்று ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் ஏற்கனவே பல முறை கடல் உள்வாங்கியுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய சுனாமி ஏற்பட்டபோது திருச்செந்தூரில் அலைகள் அடங்கி கடல் உள்வாங்கியது குறிப்பிடத்தக்கது.