ஹூப்ளி-ராமேஸ்வரம் வழி புதுக்கோட்டை சிறப்பு ரயிலின் சேவை நீடிக்கப்படுமா?
ராமேஸ்வரம்-புதுக்கோட்டை-திருச்சி வழித்தடத்தில் கர்நாடக மாநிலத்தின் எந்த பகுதிக்கு நேரடி ரயில் சேவை இல்லாமல் இருந்துவந்தது. இதனால் யஷ்வந்த்பூர்-ராமேஸ்வரம் இடையே புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக இரவு நேர ரயில் இயக்கவேண்டும் என்று கோரிக்கையும் வலுத்துவந்த நிலையில், வரலாற்றிலேயே முதன் முறையாக கடந்த மாதம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வட கர்நாடக பகுதியும் தென்மேற்கு ரயில்வேயின் தலைமையகமான ஹூப்ளியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு யஷ்வந்த்பூர்,ஓசூர்,தர்மபுரி,சேலம்,நாமக்கல் புதுக்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது.
அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே இந்த ரயிலுக்கு அனைத்து ரயில் நிலையங்களிலும் கணிசமான அளவு பயணிகள் பயன்பாடு இருந்துவருகிறது. இவ்வாறு கடந்த 2 மாதகாலமாக புதுக்கோட்டை வழியாக இயங்கி வருகின்ற 07355/56 ஹூப்ளி-ராமேஸ்வரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை வரும் செப் 25 வுடன் நிறைவு பெறுகிறது. எனவே நின்று செல்லும் அனைத்து ரயில் நிலைய பயணிகளிடமும் அதிக வரவேற்புள்ள இந்த சிறப்பு ரயிலின் சேவையை வாரம் இருமுறை ரயிலாக மாற்றி மேலும் 3 மாத காலத்திற்கு நீடிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே 07355/56 ஹுப்ளி-ராமேஸ்வரம்-ஹுப்ளி வழி ஹாவேரி , தவன்கேரே, துமகூரு, யெஷ்வந்த்பூர்(பெங்களூரு), பனஸ்வாடி(பெங்களூரு), ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, #புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டுவரும் வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை மேலும் 3 மாதங்களுக்கு (01/01/2023 வரை) நீடிக்கப்பட்டுள்ளது.
ஹூப்ளி/பெங்களூரு/ஓசூர் வாழ் புதுக்கோட்டை வாசிகள் பயன்படுத்திக்கொள்ளவும்.
Source:PudukkottaiRailusers