இன்று (23.09.22) திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் அவர்கள் தென்னக ரெயில்வேயின் பொது மேலாளர் திரு.பி.கோ. மால்யா அவர்களை நேரில் சந்தித்து புதுக்கோட்டை மாவட்டம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்..
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன் புதுக்கோட்டை – தஞ்சாவூர் வழி கந்தர்வக்கோட்டை புதிய ரெயில் பாதை அமைக்க உரிய நடவடிக்கை வேண்டும் என்றும், காரைக்குடி – திருவாரூர் வழி அறந்தாங்கி , பேராவூரணி, திருத்துறைப்பூண்டி, மார்க்கத்தில் ரெயில்கள் இயக்க போதுமான கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும் என்றும், திருவப்பூர் மற்றும் கருவப்பலான் கேட் மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என்றும் அத்துடன் மேலும் பல கோரிக்கைகளையும் வலியுறுத்தினார் திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்..
