வலியை உணர்ந்த பங்க் உரிமையாளர்.

440

பெட்ரோல் பங்க்ல பெட்ரோல போட்டுட்டு
டூவீலருக்கு ஏர் பிடிக்கறப்ப அந்த ஏர் பிடிக்கிற பசங்களோட கடினமான அந்த வேலையைப் பார்க்குறப்ப கொஞ்சம் மனசு கஷ்டப்படும்.

பிசியான அலுவலக நேரத்துல வண்டி மேல வண்டியா வரிசைக்கட்டி

வரும். ஒவ்வொரு வண்டிக்கும் முன்ன பின்ன வீல்களுக்கு குனிஞ்சி நிமிர்ந்து காத்துப் பிடிக்குறது நிஜமாவே ரொம்ப கஷ்டமான வேலை.



நம்ம ஒரு பத்து முறை குனிஞ்சி நிமிர்ந்து

எந்திரிச்சாத் தான் அந்தக் கஷ்டத்தை உணர முடியும்.

அந்தக் காலை நேரத்துல உஸ்ஸ் அப்பாடான்னு கொஞ்சம் உட்கார முடியாது.

அதுலயும் ஒரே ஒரு கம்ப்ரெசர் மானிட்டர்

தான் இருக்கும்.

பின் வீலுக்கு நாப்பது போட்டா முன் வீலுக்கு முப்பது இப்படி ஏத்த இறக்க வேணும்

படாதபாடு தான் பாவம்.

இந்த மதுரை எக்கோ பார்க் தியாகராஜா

பெட்ரோல் பங்க் ஓனரு நம்மளப் போல கொஞ்சம் இரக்கப்பட்ட மனுஷர் போல.

பாருங்க தரை அளவுக்குக் கீழே ஒரு

தொட்டி கட்டி அதுல ரெண்டு கம்ப்ரெசர்

மானிட்டரையும் வச்சி முதல்ல இருக்குற மானிட்டர்ல 30 அளவு முன் வீலுக்கு ரெண்டாவது மானிட்டர்ல 40 அளவு வச்சி நின்னுக் கிட்டே காத்துப் பிடிக்க ஒரு வசதியை செஞ்சிக் கொடுத்துருக்காரு…

காற்று அடிக்கும் வேலை செய்யும் இரண்டு பேருக்கும் வேற்கக்கூடாதுனு தனி தனியாக தலைக்கு மேல மின்விசிறி வசதி வேற
நிர்வாகம் வேற லெவல்.
(இடம் தியாகராஜ பெட்ரோல் பங்க் தல்லாகுளம் மதுரை )


இது போல வசதியை நம்ம ஊரு பெட்ரோல் பங்க்குகளிலும் அமைச்சுக் கொடுத்தா நல்லா இருக்கும்ல..

நன்றி