புதுக்கோட்டை மாவட்டத்தில்
தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க 30.09.2022-க்குள் விண்ணப்பிக்கலாம்.
-மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., Kavitha Ramu அவர்கள் தகவல்.
2022-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க வெடிபொருள் சட்டமும், விதிகளும் (2008)-இன்கீழ், கீழ்க்கண்ட ஆவணங்களுடன் 30.09.2022-இக்குள் மாவட்டத்தில் அனுமதிபெற்று இயங்கி வரும் இ-சேவை மையங்கள் (e-sevai) மூலம் விண்ணப்பிக்கலாம்.
தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற எதிர்வரும் 30.09.2022-இக்குள் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் மனுச் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள், புல நீல வரைபடம் (6 நகல்கள்) சொந்த இடம் எனில் பத்திர ஆவணங்கள் (அசல் & 5 நகல்கள்)/ வாடகை இடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திர நகல், ரூ.500/-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட F-Challan நகல். முகவரி (பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை/எஸ்மார்ட் அட்டை). நகராட்சி/ஊராட்சி/பேரூராட்சி வரி ரசீது. பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படம் ஆகும்.
மேலும், தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பங்கள் அளிக்க கடைசி நாள் 30.09.2022 (மாலை 5.45 மணிக்குள்) ஆகும். இத்தேதிக்குள் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். மேலும் 01.10.2022-இக்கு பின்னர் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிக்க இயலாது எனவும், மேலும் உரிய காலத்திற்குள் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரம் முன்னதாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை. District Collector, Pudukkottai