சத்தம் இன்றி ஒரு சாதனை புதுக்கோட்டை

279

இனி மழை பெய்தாலும் வெள்ளம் வந்தாலும் கவலை இல்லை

சத்தம் இன்றி ஒரு சாதனை

புதுக்கோட்டை நகர திமுக செயலாளர் ஆ.செந்தில் முயற்சியால் வரும் முன் காப்போம் பணியை தனது சொந்த நிதியில் துவக்கினார்.
வரும் மழைகாலத்தை கருத்தில் கொண்டு, காட்டுபுதுக்குளம்,தேவர் குளத்தில் இருந்து தூர்வாரும் பணி போர்கால அடிப்படையில் நடந்து வருகிறது. வருகின்ற மழை காலத்தில் கம்பன் நகர்,பெரியார் நகர் நிச்சயம் காக்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது… பெரியார் நகர் பூங்கா நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட கால கனவு நனவாகிறது

பெரியார் நகர் பூங்கா நகர் கம்பன் நகர் பகுதிகளில் மழை வெள்ளம் தேங்காத வகையில் நகர திமுக செயலாளர் செந்தில் ஏற்பாட்டில் புதிய திட்டம் ஜரூர் வேகத்தில் தொடங்கி பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வருட மழைக்காலத்திலும் புதுக்கோட்டை நகரில் பெய்யும் அனைத்து மழை வெள்ளமும் ஒருசேர திரண்டு சந்தைப்பேட்டை சாலை வழியாக மேல ராஜவீதி சாலை வழியாக காட்டு புது குளத்தில் பாயும் பின்னர் அங்கு சேகரமாகும் மழை வெள்ள நீரானது பெரியார் நகர் பூங்கா நகர் கம்பன் நகர் பகுதிகளில் புகுந்து பாதிப்பை உண்டாக்கும்

மழைக்காலம் வந்தாலே பெரியார் நகர் பூங்கா நகர் பகுதி பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து விடுவார்கள்

இதனை தடுக்கும் வகையில் புதுக்கோட்டை நகரில் பெய்யும் ஒட்டுமொத்த மழை நீரையும் காட்டுப் புதுக்குளம் வழியாக குண்டாற்றில் இணைக்கும் புதிய திட்டத்தை நகரச் திமுக செயலாளர் செந்தில் தன்னார்வலர்களை கொண்டு பழைய வாய்க்கால்களை சீரமைத்து வருகிறார்

அதற்கான தீவிர பணிகளை தொடங்கி எந்த வித விளம்பரமும் இன்றி மக்களின் நன்மைக்காக செயல்படுத்தி வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த பணிகளின் முதல் கட்டமாக ராஜா கோபாலபுரம் வாரிப்பட்டி வாய்க்காலை ரயில்வே பாலத்திலிருந்து 30 அடி அகலத்திற்கு 20 அடி ஆழத்திற்கு தூர்வாரி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தொடங்கி ராஜகோபாலபுரம் பிரதான சாலை வழியாக காட்டுபுதுக்குளம் வரை உள்ள வாய்க்காலை சீரமைக்கும் பணியை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்

இதற்காக காவிரி கடை மடை பகுதி பாசன ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைகளை பெற்று மற்றும் கைபா நிறுவன உதவியுடன் தூர்வாரும் பணிகளை தனி ஒருவராக செயல்படுத்தி வருகிறார்

இதற்காக செய்தி தாள்களிலோ செய்தி சேனல்களிலோ தன்னையோ தான் செய்து வரும் பணிகளைப் பற்றியோ விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் கருமமே கண்ணாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்

இவர் சமுதாய நலன் கருதி மேற்கொண்ட பணி ஒருவரின் மூலம் ஒருவராக பலருக்கும் பரவி தற்போது புதுக்கோட்டை நகர மக்களின் கவனத்தை ஈர்த்து அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் பாராட்டையும் புதுக்கோட்டை நகராட்சி தலைவர் திலகவதி கணவருமான நகரச் செயலாளருமான ஆ செந்தில் பெற்று ஆச்சரியத்தையும் உண்டாக்கியுள்ளது இதன் மூலம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.

மேலும் தற்போது கழிவுநீர் குட்டையாக திகழும் காட்டுப்புதுக்குளம் கீழ ஏழாம் வீதியில் உள்ள புதுக்குளம் பரப்பளவிற்கு காட்டு புதுகுளமும் ஆழப்படுத்தப்பட்டு அதன் ஒரு கரையில் அந்த பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அரளைக் கற்களை கொண்டு கரைகளை பலப்படுத்தி சாலை வசதியை உண்டாக்கி கரைகளில் போதுமான மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு பொதுமக்களும் தாய்மார்களும் பொழுது போக்கிற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் “பூங்கா மற்றும் நடைபயிற்சி” மேற்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்படும் என செந்தில் தகவல் தெரிவித்தார்

காட்டுப் புது குளத்தில் சேகரமாகும் மழை நீர் ஆனது பெரியார் நகர் பூங்கா நகர் கம்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் செல்லாத வகையில் மடை மாற்றி அனைத்து மழை வெள்ளம் மேற்கு நோக்கி வாரிப்பட்டி வழியாக ரயில் பாலம் தேவகுளம் சென்று அப்படியே ரயில்வே பள்ளத்தில் விழுந்து குண்டாற்றில் பாயும் வகையில் வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என தெரிவித்தார் இதன் மூலம் பெரியார் நகர் பகுதி பொதுமக்கள் மழைக்கால தொல்லைகள் நீங்கி ஒரு சிறந்த பயனை அடைவார்கள் என்பது எள்ளளவு கூட சந்தேகம் இல்லை

நன்றி!நன்றி!!நன்றி!!
தொடரட்டும் நற்பணிகள்….
இறையருள் நிறையட்டும்…