மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு!

396

மத நல்லிணக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம், தாணான்மை நாடு கீரமங்கலத்தில் உள்ள பட்டவ அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள தாம்பூல தட்டுகளுடன் வருகை தந்த இஸ்லாமியர்கள்!

இந்த விழாவிற்கு கோயில் நிர்வாகம் சார்பில் அப்பகுதியை சுற்றியுள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கீரமங்கலம் மேற்கு முஸ்லிம் பேட்டை ஜமாத்தார்கள் சார்பில் பட்டாசு வெடித்து வானவேடிக்கை மற்றும் மேளதாளங்கள் முழங்க, குதிரை நாட்டியத்துடன் ஏராளமான இஸ்லாமியர்கள் தாம்பூல தட்டில் காய், கனி, பூ உள்ளிட்டவைகளோடு, சீர் எடுத்து ஊர்வலமாக அக்கோயிலுக்கு சென்றது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

மற்றும், கொத்தமங்கலம் கிராமம் சார்பாகவும் சீர் எடுத்துச் சென்று இறையருள் பெற்றும், ஊர் மரியாதை ஏற்ற படங்களும்.