சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு

412

திண்டுக்கல் – நத்தம் செல்லும் சாலையில் சாலை விரிவாக்கம் மற்றும் புதிய தார் சாலை அமைக்கும் பணி தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாகவும், அந்த சாலையில் 15 கிலோ மீட்டருக்கு உள்ளாக அஞ்சு குளிப்பட்டி என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைத்து வசூல் செய்ய இருப்பதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.

இது மக்கள் போராட்டமாக மாற இருக்கிறது. உடனடியாக மாவட்ட நிறுவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழகத் துணைப் பொதுச் செயலாளர்,. முன்னாள் அமைச்சருமான,. நத்தம் சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா. விஸ்வநாதன் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் மனு அளித்துள்ளார்.