திருப்பதி கோவிலுக்கு ரூ. 1 கோடியே 2 லட்சம் நன்கொடை வழங்கிய இஸ்லாமிய தம்பதி

300

சென்னையை சேர்ந்த சுபினாபானு, அப்துல் கனி ஆகியோர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு இன்று 1 கோடியே 2 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கினர். இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்ட பின் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் 1 கோடியே 2 லட்சம் ரூபாய்க்கு உரிய வரைவோலையை நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த தொகையில் 15 லட்ச ரூபாயை அன்னதான அறக்கட்டளைக்கும், 87 லட்ச ரூபாயை திருப்பதி மலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் நடைபெற்று வரும் புதுப்பிக்கும் பணிக்கும் பயன்படுத்த அவர்கள் நிர்வாக அதிகாரி தர்மரா ரெட்டியிடம் கேட்டு கொண்டனர்.*