எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது !..

202

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம் கடற்கரை துறைமுகத்தில் 100க்கும் அதிகமாக விசைப்படகுளிள் 300க்கும் அதிகமாக மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் இருந்து தமிழ்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மூலம் எட்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எட்டு மீனவர்களையும் புகையும் சிறை பிடித்து அவர்கள் மீது எல்லை தாண்டிய குற்றச்சாட்டு பதிவு செய்து இலங்கையின் காரை நகருக்கு அழைத்துச் சென்றார்

மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜெகதாப்பட்டினம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களையும், படகையும் மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகளுக்கு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்களை விடுவிக்க கோரி முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்