திமுக மாவட்ட செயலாளர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது…

337

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்ற பின்வரும் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் மூவர் (கட்டாயமாக ஒருவர் பொதுத் தொகுதியினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்), பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் (மகளிர் ஒருவர் கட்டாயமாக இருத்தல் வேண்டும்) பொறுப்புக்களுக்கு போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து கீழே குறிப்பிட்டுள்ள நாட்களில் பொறுப்பு ஒன்றுக்கு ரூ.25,000/- கட்டணமாக தலைமைக் கழகத்தில் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

வேட்புமனுக்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர்/ஒன்றிய/நகர/நகரிய/பகுதி/மாநகர செயலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதிகளாகத்தான் இருக்க வேண்டும்.

வேட்புமனு விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு ரூ.1000/- கட்டணம் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.