சென்னைக்கு தினசரி 3, கோவைக்கு வாரத்தில் 1.
கண்டுகொள்ளப்படாத கோவை-ராமேஸ்வரம் வாராந்திர ரயில்!

1273

ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்னைக்கு அடுத்தபடியாக தினசரி ரயில் சேவை தேவைப்படுவது கோவைக்கு தான். மதுரை கோட்டத்தில் உள்ள மானாமதுரை-திருச்சி வழித்தடத்தில் கடந்த 2013 காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக அறிமுகப்படுத்தப்பட்ட கோவை-ராமேஸ்வரம் வாராந்திர ரயில் ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இந்த ரயிலுக்கு பயணிகளிடையே அமோக வரவேற்பு இருந்தாலும் இந்த வாராந்திர ரயில் சேவையை தினசரியாக்க ஏன் வாரத்தில் 2 நாட்கள் கூட இயக்க சாத்தியமில்லை என்றே பதிலையே பல ஆண்டுகளாக தென்னக ரயில்வே நிருவாகம் கூறிவருகிறது. இதற்கு கோவை-ராஜ்கோட் ரயிலுடன் பெட்டி பகிர்வையே பிரதான காரணமாக தென்னக ரயில்வே முன்வைக்கிறது. இந்த வழித்தடத்திற்கு கோவைக்கான ரயில் தேவை எந்த அளவில் உள்ளது என்பது ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் எதிரொலிக்கிறது. இதனை உணர்ந்து கூட16617/18 கோவை-ராமேஸ்வரம் வாராந்திர ரயிலின் சேவையை அதிகரிப்பது தொடர்பாகவோ அல்லது புதிய பெட்டிகளை கொண்டு இந்த ரயிலின்சேவையை அதிகரிக்கவோ தென்னக ரயில்வே இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.



சரி புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் வரை நீடிக்க முதலில் முன்மொழியப்பட்ட 16843/44 பாலக்காடு டவுன் -திருச்சி வழி கோவை ரயிலையும் ராமேஸ்வரம் வரை நீடிக்கவும் ரயில்வே துறை காலதாமதப்படுத்தி வருகிறது. மானாமதுரை-திருச்சி வழித்தடமும் தென்னக ரயில்வே ஆளுகைக்கு உட்பட்டே வருகிறது என்பதை உணர்ந்து இந்த வழித்தடத்தின் அதிகபட்ச தேவையான கோவை க்கு தினசரி ரயில் இயக்க தென்னக ரயில்வே விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து தென்னக ரயில்வே மேலாளருக்கும் ரயில்வே வாரிய தலைவருக்கும் கடிதம் எழுதவேண்டுகிறோம்.

Source : Pudukkottai Rail users