வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க கடைசி நாள்: 30.09.2022

172

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் 2022 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியர் நேர்காணல் ஜூலை-2022 முதல் செப்டம்பர்-2022 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் 2022 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியர் நேர்காணல் ஜூலை-2022 முதல் செப்டம்பர்-2022 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓய்வூதியர்கள் ஓய்வூதியர்கள் தங்களது நேர்காணலை ஜூலை-1 முதல் கீழ்கண்ட முறைகளில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

1) வீட்டு வாசலுக்கு வரும் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி சேவை மூலம் வாழ்நாள் சான்று சமர்ப்பித்தல்.

2) ஜீவன் பிரமாண் என்ற இணையதள சேவை (Jeevan Pramaan Portal மூலமாக பொதுசேவை/இ-சேவை மையங்கள் மூலமாக மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பித்தல்.

3) வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate) உரிய அலுவலரின் சான்று பெற்று தபால் மூலம் ஓய்வூதியம் பெறும் கருவூலத்திற்கு அனுப்புதல்.

4) ஓய்வூதியர்கள் தங்களின் ஆன்ட்ராய்டு கைபேசி மூலம் Aadhaar Face Id மற்றும் Jeevan Pramaan செயலியை Jeevan Pramaan Portal-லிருந்து பதிவிறக்கம் செய்து முகப்பதிவு மூலம் வீட்டிலிருந்தபடியே வருடாந்திர நேர்காணல் செய்து கொள்ளலாம்.

5) மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்களில் அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேரில் சென்று நேர்காணல் செய்துகொள்ளலாம்.

மேலும், புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியத்தை புதுப்பித்து கொள்வதற்கு 30.09.2022 கடைசி நாள் ஆகும். எனவே, இம்மாவட்ட ஓய்வூதியர்கள் மேற்காணும் முறைகளில் தங்களது ஓய்வூதிய நேர்காணலை 30.09.2022 க்குள் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்காணலுக்கான ஆவணங்கள் ஓய்வூதிய புத்தகம், ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் கைபேசி எண் ஆகியவை ஆகும். ஓய்வூதியர்கள் 30.09.2022-க்குள் நேர்காணலுக்காக, கருவூலங்களுக்கு வரத்தவறினாலோ, அல்லது இணையதள சேவை மற்றும் வாழ்நாள் சான்று சமர்ப்பித்தல் மூலம் புதுப்பிக்க தவறினாலும், தொடர்ந்து ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கிற்கு ஓய்வூதியம் அனுப்ப இயலாத நிலை ஏற்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் புதுக்கோட்டை.