புதுக்கோட்டையில் விநாயகர்சதுர்த்தி ஊர்வலம்…

452

இளைஞர்களின் கொண்டாட்டத்துடன் புதுக்கோட்டை நகரத்தில் நடைபெற்றது….

#திலகர்_திடலில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக #புதுகுளம் சென்று அங்கு கலைக்கப்பட்டது விநாயகர் சிலைகள்…

பொன்னமராவதியில் விநாயகர் சதுர்த்தி விழா குழுவின் 21 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் மற்றும் கரைக்கும் வைபோகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி விநாயகர் சதுர்த்தி விழா குழுவின் 21 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து பொன்னமராவதி சிவன் கோவில் எதிரே உள்ள மேடையில் விநாயகர் சிலையை வைத்து மூன்று கால சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது. பின்பு வெள்ளிக்கிழமை மாலை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. சேதுபதி அம்பலகாரர் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பொன்னமராவதி சிவன் கோவில் எதிரே நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விழா குழு தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். விழாவில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம், பொன்னமராவதி இந்திரா நகர், பூக்குடி வீதி, பாலமேடு வீதி, நகைக்கடை பஜார், 7 ரூம் சந்து நண்பர்கள், அண்ணா சாலை, கோல்டன் பாய்ஸ், பெரியார் நகர், கோழிக்கடை சந்து, பழனியப்பா காலனி, பாண்டிமான் கோவில் கலைஞர் நகர், காந்தி சிலை, வலம்புரிநாத சுவாமி தெற்குக்தெரு, அம்மன் கோவில் வீதி, காமராஜர் நகர், கோட்டை பிள்ளையார், ஹவுசிங் யூனிட், நாட்டுக்கல் மற்றும் விஜய் மக்கள் நற்பணி மன்ற இயக்கத்தினர் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் சிவன் கோவிலில் துவங்கப்பட்டு நாட்டுக்கல், வலையப்பட்டி, அடைக்கண் ஊரணி, மலையாண்டி கோவில், பொன்-புதுப்பட்டி, காந்தி சிலை அண்ணா சாலை பேருந்து நிலையம் வழியாக அமரகண்டன் ஊரணிக்கு வந்தடைந்தது.

பின்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட விநாயகருக்கு கரையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பின்பு அமர்கண்டான் ஊரணியில் ஒன்றன்பின் ஒன்றாக கரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் விநாயகர் சதுர்த்தி குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் மற்றும் கரைக்கும் வைபோகத்தில் அசம்பாவிதங்கள் தடுக்கும் வகையில் பொன்னமராவதி காவல்துறையினர் காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

படங்கள் மற்றும் செய்திகள் கீரவாணி அழகு இளையராஜா