தமிழகத்தில் #புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி வட்டத்தில் இருக்கும் கிராமம்
திருக்களம்பூர்.
இவ்வூரில் அருள்மிகு கதலிவனேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் சுவாமி சுயம்புலிங்கம். அதைச்சுற்றி பிரகாரத்தில் உள்ள வாழை மரங்களும் சுயம்பு. இங்குள்ள வாழைமரத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவதே. வெட்டிக்கொத்துவதோ இல்லை. இந்த வாழையை வெளியே கொண்டு வந்து வைத்தாலும் உண்டாகாது. வெளியே உள்ள வாழையை உள்ளே வைத்தாலும் உண்டாகாது. இலை,காய்,பூ,நார், தண்டு, கிழங்கு எதுவும் மனிதர்கள்.அபிஷேகம் செய்வதற்கு முன் சாப்பிட்டால் உடப்பு முழுவதும் வெண்குஷ்டம் வந்துவிடும். பழம் பார்க்க மலைப்பழமாக இருக்கும். உரித்தால் ரஸ்தாளி செவ்வாழை என்று கூற முடியாது. மரத்தை வெட்டினால் சிவப்பு திரவமாக வரும். இதுவே இம்மரங்களின் சிறப்பாகும். இந்த ஊரில் வால்மீகி முனிவர் தபோவனம் அமைத்திருந்தார். அதனால் திருக்கரம்பூர் என்ற பெயருமுண்டு. அவர் இறைவனை இதயத்தில் ஆட்கொண்டதால் திருக்குரம்யாண்ட நாயனார் என்ற பெயரும் இறைவனுக்கு அதனால் உண்டு. ஸ்ரீ சீதாதேவி கர்ப்பிணியாக இருக்கும்போது கொண்டுவந்து விட்ட இடம் இந்த இடம்.
ஸ்ரீ லவனும், ஸ்ரீ குசனும் பிறந்த இடம் இது ஸ்ரீசீதாதேவி. வால்மீகி முனிவர் ரிஷிபத்தினிகள் மற்றும் மாணவர்கள் இந்த வாழைப்பழத்தைத் தான் சாப்பிட்டு பசி ஆறி இருக்கிறார்கள். ஒரு கை அளவு பஞ்சாமிர்தம் சாப்பிட்டால் ஒருநாள் முழுவதும் பசிக்காது. குழந்தைகள் இருவரும் இளமைப்பருவம் அடைந்து விட்டதால் இளவரசுப்பட்டம் கட்ட
வேண்டும் என்று ஸ்ரீசீதாதேவி இறைவனிடம் வேண்ட இறைவனும் அசரீரியாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறேன் என்று கூறினார். சீதாதேவிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்படி இருக்கும் போது ஸ்ரீ ராமருடைய அசுவமேதக் குதிரை இவ்வழியாக வந்தது. அதில் இந்தக் குதிரையை யாரும் பிடித்துக்கட்டக் கூடாது என்றும் வணங்கி வழிவிட வேண்டும் என்று எழுதி இருந்தது. இந்த வாசகத்தைப் பார்த்த ஸ்ரீலவனும், ஸ்ரீகுசனும் அந்த குதிரையை இங்கே உள்ள வாழைமரத்தில் பிடித்துக் கட்டிவிட்டார்கள். அதை மீட்க வந்த இலட்சுமணன் மற்றும் படைபட்டாளங்களை மயக்கநிலை அடையைச் செய்தார்கள். கடைசியாக ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி குதிரையை மீட்க வரும்போது ஸ்ரீலவனும், ஸ்ரீகுசனும் எதிர்த்து போரிட்டார்கள்.
ஸ்ரீ ராமரும் போரிட்டார். இருதரப்பிலும் யாருக்கும் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை. அந்த நேரத்தில் ஸ்ரீ வால்மீகி ரிஷி வந்து ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியிடம் இது வேறுயாருமல்ல உன்னுடைய மகன்களும் மனைவியும் தான் என்று அறிமுகம் செய்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் பழுத்த பின்னர் பஞ்சாமிர்தம் செய்து சாமிக்கு அபிஷேகம் செய்த பினனர் சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள வியாதிகள் குணமாகும்.வைத்தார். இரண்டு பேரும் சேர்ந்ததற்கு அடையாளமாக ஸ்ரீ மகாகணபதியை உளியால் அடிக்காமல் ஒரு பெரிய கல்லை சிறிய கல்லால் தட்டி விநாயகர் ஆக்கினார்கள். அதை பிரதிஷ்டை செய்தார்கள். அதனால் ஸ்ரீ தசரதமகாராஜர் ஒரு குடையின் கீழ் ஆண்ட சூரிய குலத்திற்கே முன்ஜென்ப பாவம் நீங்க வாழைக்காய் பரிகாரம் செய்தால் நீங்கிவிடும். யுகங்கள் தாண்டி கன்னிமூல ஸ்ரீ மகாகணபதியும் வாழைமரத் தோட்டங்களும் இருந்தது.
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன். சோழமன்னன் மேல் படையெடுத்துச் செல்லும்போது வழியில் வாழைமரங்களுக்கிடையே கோயில் தெரிந்ததை பார்த்து விட்டு அங்கே உள்ளே செல்லும் போது பாண்டிய மன்னரின் குதிரை கால்குழம்பு சுவாமியின்மேல் பட்டு சிவலிங்கம் மூன்று பிளவுகள் ஆகி அதில் இருந்து குருதி கொட்டியது. இதனால் கண்பார்வை இழந்த மன்னன் இறைவனிடம் இறைவா நான் அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். எனக்குக்கண்பார்வை வரவேண்டும் என்று வேண்டினார்” இறைவனும் அரசனின் வேண்டுதலுக்கு இணங்கி இங்கே ஒரு ஆலயம் எழுப்பித்தா எனக்கு. உனக்கு கண்பார்வை கிட்டும் என்று உறுதி கூறவே இறைவன். மன்னருக்கு கண்பர்வையை கொடுத்து அருளினார். அதனால் ஸ்ரீ வைத்தியநாதசுவாமி என்ற பெயருமுண்டு. வாழைத்தோட்டத்தில் இருப்பதால் கதலிவனேஸ்வரர் என்ற பெயருமுண்டு. பாண்டிய மன்னர் கோயில் கட்டினார். இறைவனுக்கு அவர் எங்கே கோயில் கட்டினாலும் ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் இல்லாமல் கோயில் கட்டுவது இல்லை. ஸ்ரீமீனாட்சி சொக்கநாதருக்கு தனிக்கோயில் பிரகாரத்தில் ரிஷிபாரூடன் கட்டினார். இக்கோயில் திருமணம் ஆகாதவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி வியாழக்கிழமை பள்ளிக் குழந்தைகளுக்குப் பாயாசம் வைத்துக் கொடுத்து சுவாமிக்கும், அம்பாளுக்கும், அபிஷேக ஆராதனை செய்தால் ஒரு மாதத்தில் திருமணம் நடப்பது உறுதியாகும். பிரிவினை ஆன குடும்பத்தில் கணவன் மனைவி இருவரில் யார்,
ஆலயத்தை 108 முறை சுற்றி, குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்க. ஒருவாரத்தில் குடும்பம் ஒன்று சேரும்.
தீராத வியாதிகள் உடம்பில் இருந்தால் நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், விபூதி, பால் இவைகளை சுவாமிக்கு அபிஷேகம் செய்தபின் சாப்பிட நோய்கள் தீரும்.
ஆதிசங்கரர் சுவாமி தரிசனத்திற்கு இங்கே வந்தபோது அம்பாள் இல்லாமல் தரிசனம் செய்ய இயலாது என்பதால் அம்பாளை பிரதிஷ்டை செய்ய சுவாமியே சுவாமியைப் பார்ப்பது போல் எதிரே கிழக்கே ஸ்ரீதிருவளர் ஒளிஈஸ்வரர் ஸ்ரீசௌந்தர்நாயகி என்ற கோயிலை எழுப்பி அதன் பின்னரே அம்மன் கோயிலில் அம்மனை பிரதிஷ்டை செய்தார். அதனால் ஸ்ரீகாமகோடிஸ்வரி என்ற பெயருமுண்டு. ஸ்ரீ ஆதிசங்கரர் காசிக்கு மடாலயம் அமைக்கச் சென்ற போது காசி மன்னரிடம் உனக்கு பூர்வ ஜென்ம பாவம் உள்ளது. அதை நீக்க வேண்டும். என்றால் தமிழ்நாட்டில் திருக்களம்பூர் உள்ளது. அங்கே ஸ்ரீகதலிவனேஸ்வரர். ஸ்ரீவைத்தியநாதசுவாமி காமகோடீஸ்வரி சமேதராக வீற்றிருக்கிறார். அங்கே சென்று இருவரையும் வழிபட்டால் உனக்குப் பூர்வஜென்ம பாவம் தீரும் என்று கூறியிருக்கிறார். அதற்குக் காசி மன்னர் பாவங்களை தீர்க்க எல்லோரும் காசிக்கு வருகிறார்கள். அங்கே செல்லச் சொல்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார். காசி பாவம் தீர்க்கக் கூடியது தான் பாவங்கள் நீங்கி நோய்கள் நீங்கி சொர்க்கம் அடைகிற இடம் காசி. ஆனால் திருக்களம்பூரில் தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி நோய்கள் நீங்கி வாழையடி வாழையாக வளர்ச்சி அடையளாம். குடும்பம், செல்வாக்கு, வாரிசு அடையலாம். குடும்பம், செல்வம், செல்வாக்கு, வாரிசு, தொழில், நற்பெயர் ஆகியவை வளர்ச்சி அடையும் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்டு காசி மன்னன் இங்கே வந்திருக்கிறார். அதுசமயம் இருட்டாக இருக்கவே காலையில் சாமிதரிசனம் செய்யலாம் என்று தங்கியிருக்கிறார். இரவில் மன்னரின் கனவில் வயோதிக ரூபத்தில் உனக்கு வசதி வாய்ப்பு உள்ளது என்னைப்போல வயோதிகரால் எப்படி காசிக்கு வரமுடியும் என்று கேட்டுள்ளார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மன்னன் கேட்டுள்ளார்.
நீ கொண்டு வந்துள்ள விஸ்வநாதரையும். விசாலாட்சியையும் பிரதிஷ்டை செய்ய எல்லோரும் காசிக்கு வந்து தரிசனம் செய்த பலன் கிடைக்கும். உனக்கு பாவம் தீரும் என்று கூறியிருக்கிறார். காலையில் உதயமாகிய நாழிகையில் விஸ்வநாதர் விசாலாட்சி பிரதிஷ்டை செய்யப்பெற்றது. திருக்களம்பூர் அருள்மிகு கதலிவனேஸ்வரர் திருக்குரம்பு நாயகி (காமகோடீஸ்வரி) சமேத வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு வந்தால் மதுரை மீனாட்சி சொக்கநாதர். காசி விஸ்வநாதர் விசாலாட்சி, காஞ்சி காமகோடீஸ்வரி இவர்களைத் தரிசனம் செய்த பலன் உண்டு. 1008 சிவாலயங்களைத் தரிசனம் செய்த பலனும் உண்டு.
திருமணம் வேண்டி வருபவருக்கு, குழந்தை வரம் வேண்டுவோருக்கு, தீராத நோய் தீர வேண்டி வருபவருக்கு நோய் தீர்க்கக் கூடிய மருந்துண்டு. செல்வம், செல்வாக்கு அடைய, வாழ்க்கையில் சந்தோஷம் அடைய என அனைத்திற்கும் இங்கே பரிகாரம் உண்டு.
கட்டுரை உதவி: இளையராஜா அழகு.பொன்னமராவதி