அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 10 முக்கிய கோரிக்கைகள்.

747

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி முக.ஸ்டாலின் அவர்களின் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அறந்தாங்கி தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் கோரிக்கையாக அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி S.T ராமச்சந்திரன்MLA கீழ்க்கண்ட கோரிக்கைகள் மாண்புமிகு முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது

1.அறந்தாங்கி தொகுதியில் குடிநீருக்காக ஆழ் குழாய் கிணறு தோண்டினால் பெரும்பாலன இடங்களில் உப்பு நீரே கிடைப்பதால் பொது மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகிறார்கள். ஒரு குடம் ரூ.10 கொடுத்து வாங்கி வருகின்றனர். எனவே காவிரி நீரை ஆதாரமாக கொண்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீருக்கு தள்ளிறைவு பெறும் விதத்தில் அறந்தாங்கி தொகுதி முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்பட வேண்டும்.

2.அறந்தாங்கி நகரில் உள்ள கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தில் தற்போது

2.அறந்தாங்கி நகரில் உள்ள கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தில் தற்போது பேருந்துகள் வந்து செல்ல போதிய இடமும், பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. எனவே அறந்தாங்கி நகரில் சந்தை நடைபெறும் தஞ்சாவூர் சத்திரத்திற்கு சொந்தமான இடத்தினை இரண்டாக பிரித்து சீர்செய்யப்பட்ட சந்தையாகவும், மறு பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையமும் ஏற்படுத்தித்தர வேண்டும்.

3.அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் 52 பஞ்சாயத்துகள் அவை அறந்தாங்கி மற்றும் ஆலங்குடி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் உள்ளன. அறந்தாங்கி தொகுதியில் உள்ள 20 பஞ்சாயத்துகளை உள்ளடக்கி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியமாகவும், ஆலங்குடி தொகுதியில் உள்ள 32 பஞ்சாயத்துகளை உள்ளடக்கி புதிய ஊராட்சி ஒன்றியமாகவும் அதாவது அறந்தாங்கி வடக்கு – அறந்தாங்கி தெற்கு என இரண்டு ஊராட்சிகளாக பிரித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

4.மணமேல்குடியில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் பணிமனை ஒன்றை புதியதாக அமைத்துத் தர வேண்டும்.

5.மணமேல்குடி தாலுக்காவில் உள்ள கோடியக்கரை கடற்கரைக்கு அதிகமாக பொது மக்கள் வருவதால் கோடியக்கரையை சுற்றுலாதளமாக மேம்பாடு செய்து தர வேண்டும்.

6.நமது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, புதிய பொறியியல் கல்லூரி (கடல் சார் படிப்புடன் கூடிய) ஒன்றினை மணமேல்குடியில் ஏற்படுத்தித்தர வேண்டும்.

7.அறந்தாங்கி தாலுக்கா பெருநாவலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு சுற்றுச் சுவர், கழிப்பறை வசதி, லேபாரட்டரி மற்றும் புதிய வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும்.

8.அரிமழம் ஒன்றியம், ஏம்பலில் புதிய தொழிற் பயிற்சி நிலையம் (I.T.I) ஒன்று துவங்க வேண்டும்.

9.கிழக்கு கடற்கரை சாலையில் நிகழும் சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு உதவும் விதத்தில் ஆவுடையார்கோவில் தாலுக்கா மீமிசலில் தற்போது இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவருடன் கூடிய அவசர கால சிகிச்சைப் பிரிவு மருத்துவமனையாக மேம்படுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

10.ஆவுடையார்கோவில் தாலுக்கா, கானூர் திருப்புனவாசல் சாலையை அகலப்படுத்தி, திருப்புனவாசல் – ஓரியூருக்கும் இடையில் பாம்பாற்றின் குறுக்கே 25 ஆண்டிற்கு முன்பாக கட்டப்பட்ட இரண்டு மாவட்டங்களையும் இணைக்கும் விதத்தில் உள்ள தரை மட்ட பாலத்தை மேம்பாலமாக அமைத்திட வேண்டும். அதேபோல் மணமேல்குடி ஒன்றியம், பெருமருதூர் — புத்துவயல் வெள்ளாற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் அமைத்திட வேண்டும்.