ரயில்கள் நிலையங்களில் நின்று செல்வது குறித்த அறிவிப்பு ஒன்றினை ரயில்வே வாரியம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் ரத்தான நிறுத்தங்கள் மீண்டும் அனுமதிப்பதில் சிக்கல்.
ரயில் நிறுத்தங்களை, ரயில் சேவைகளை தக்கவைத்துக் கொள்ள இயக்கப்படும் ரயில் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இத்தருணத்தில் இப்பதிவின் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்.
விரைவு ரயில்கள் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் ஒரு நிலையத்தில் ஒருநிமிடம் முதல் இரண்டு நிமிடங்கள் வரை நின்று புறப்பட்டு செல்வதற்கு ஆகக்கூடிய செலவு பல்வேறு காரணங்களால் (மின் கட்டணம், டீசல் செலவு, தேய்மானங்கள் உள்ளிட்டவை) முன்பு 16,672 ரூபாயாக இருந்தது தற்போது 22,442 ஆக உயர்ந்துள்ளது என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
மெயில்/ எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கு புதிய நிறுத்துங்கள் வழங்க கட்டுப்பாடுகள்!
பனாரஸ் ரயிலுக்கான நிறுத்தத்தை மீட்பதில் சிக்கல்!
ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலை 2 நிமிடங்கள் ஒரு ரயில்நிலையத்தில் நிறுத்தி செல்வதற்கு ஆகும் செலவு தொகையை கணக்கிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது!
இருப்பினும் இந்த வருவாய் ஒரு இரயில் நிலையத்திற்கு எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டு நிறுத்தங்கள் வழங்கப்படவுள்ளன என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.
புதுக்கோட்டை மக்களுக்கு ஒரு வேண்டுகோள்:- ஏற்கனவே நமது இரயில் நிலையத்தில் பனாரஸ், அயோத்தி, அஜ்மீர் இரயில்கள் நின்று செல்வதில்லை இதனை உணர்ந்து இனி புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் நின்று செல்லும் அனைத்து ரெயில்களையும் ஆக்கபூர்வமான பயன்படுத்தவும்!
எனவே பயணிகள் பயன்பாடு, பயணச்சீட்டு விற்பனை மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விரைவு ரயில்களுக்கான நிறுத்தங்களை அனுமதிக்க/ திருத்தியமைக்க ரயில்வே மண்டலங்களை அறிவுறுத்தியுள்ளது.
போதிய பயணிகள் பயன்பாடு இல்லாத அல்லது வருவாய் இல்லாத நிறுத்தங்கள் நீக்கப்படும்.
ஒரு ரயில் நிலையத்தில் குறைந்த பட்சம் 50 முதல் 80 பயணிகள் குறிப்பிட்ட விரைவு ரயில் மூலம் பயணித்திட(ஏறவோ அல்லது இறங்கவோ) வேண்டும் என வரையறை செய்யப்பட்டு உள்ளது. இந்த வரையறை முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பயணச்சீட்டு பெற்று பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை ஆகும்.
பாசஞ்சர் ரயில்களுக்கும் இதுபோன்று சில வரையறை செய்யப்பட்டு உள்ளது
எனவே ரயில் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு ரயில் சேவைகள் மட்டுமே சிறந்தது.
பயணிகள் பயன்பாடு இல்லையென்றால் நிறுத்தங்கள் நீக்கப்படும்.
ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடைவோம்.