1300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

348

புதுக்கோட்டையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 34 லட்சம் மதிப்புள்ள 1,300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்; போலீசார் நடத்திய சோதனில் குட்கா சிக்கியது!

குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த முகமது கனி, பழனிவேல் ஆகியோரை தனிப்படை போலீஸ் கைது செய்தது

புதுக்கோட்டையில் ரூபாய் 34 லட்சம் மதிப்புள்ள குட்கா ஹான்ஸ் பொருட்கள் பறிமுதல் இருவர் கைது.

புதுக்கோட்டையில் மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக தனிப்படை பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மச்சுவாடி என் ஜி ஓ காலனி பகுதியில் நடத்திய சோதனையில் பழனிவேலு என்பவரது வீட்டில் முதல் கட்டமாக 20 கிலோ குட்கா மற்றும் ஹான்ஸ் ஆகியவை கைப்பற்றப்பட்டது இவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் போஸ் நகர் பகுதியில் உள்ள முகமது கனி என்பவர் மொத்த வியாபாரம் செய்து வருவதாக போலீசாரிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தி 1300 கிலோ குட்கா மற்றும் ஹான்ஸ் போதை பொருள்களை பறிமுதல் செய்தனர் .

இதன் மதிப்பு ரூபாய் 34 லட்சம் என கூறப்படுகிறது மேலும் இது தொடர்பாக கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிவேல் மற்றும் முகமது கனி ஆகியவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 1300 கிலோ எடையுள்ள ரூபாய் 34 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் ஹான்ஸ் பொருட்கள் கைப்பற்றப்பட்டது புதுக்கோட்டை நகரில் பரபரப்பு உள்ளகியுள்ளது