மின்சாரம் தாக்கி ஜெய்சங்கர் என்ற மின் ஊழியர் பரிதாப சாவு

396

உதவி மின் செயற்பொறியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை சிப்காட் துணைமின் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பணியின்போது மின்சாரம் தாக்கி காவேரிநகரைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்ற மின் ஊழியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்

இந்நிலையில் அஜாக்கிரதையாக பணியில் இருந்ததாக உதவி மின் செயற்பொறியாளர்கள் ரகுநாதன் மற்றும் வேலாயுதம் ஆகிய 2 பேரையும் புதுக்கோட்டை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்..