புதுக்கோட்டையிலிருந்து கோவா ரயிலில் போகலாம் வாங்க!

1239

புதுக்கோட்டை-கோவா-புதுக்கோட்டை வாராந்திர இணைப்பு ரயில் அட்டவணை & கட்டணவிவரம்!

புதுக்கோட்டை-ஹூப்ளி-கோவா இணைப்பு ரயில்!
07356/ராமேஸ்வரம்-ஹூப்ளி சிறப்பு ரயில்(ஞாயிறு மட்டும்)
➽புதுக்கோட்டையிலிருந்து- 12:50 am(ஞாயிறு இரவு “திங்கள்” கணக்கில் வரும்) புறப்பட்டு
➽ஹூப்ளி- 07:25 Pm(திங்கள் இரவு செல்லும்)

அங்கிருந்து கோவா செல்ல

17309/யஷ்வந்த்பூர்-வாஸ்கோடா காமா விரைவு ரயில்(தினசரி)
➽ஹூப்ளியிலிருந்து-10:25 pm(திங்கள் இரவு) புறப்பட்டு
➽வாஸ்கோடா காமா(கோவா)- 05:00 am(அதிகாலை)

மொத்தம் பயணநேரம் 28.10 மணிநேரம்(இரண்டு ரயில்களும் சேர்த்து)
கட்டணம் விவரம்:- புதுக்கோட்டை-வாஸ்கோடா காமா என புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிலேயே வழி திருச்சி, கரூர், சேலம், ஹூப்ளி என கேட்டு நேரடியாக Superfast Unreserved டிக்கெட்-₹310/- எடுத்து இரண்டு ரயில்களிலும் தொடர்ந்து பயணிக்கலாம்.

அல்லது இரண்டு ரயில்களுக்கு புதுக்கோட்டை ரயில் நிலையத்திலேயே ஒரே படிவத்தில்(தொடர்பயண முறையில்(Onward Journey)) இரண்டு ரயில்களுக்கு சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். இது போல மீண்டும் கோவாவிலிருந்து புதுக்கோட்டை வருவதற்கும் சேர்த்து புதுக்கோட்டை ரயில் நிலையத்திலேயே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

2 ரயில்களுக்கு சேர்த்து
➽படுக்கை வசதி(SL)= ₹580+₹180=₹760/-
(இவ்வாறு கோவா போக வர ஒரு நபருக்கு-1520/-மட்டுமே)
➽3 அடுக்கு AC(3AC)=₹1575 +₹505=₹2080/-
(இவ்வாறு கோவா போக வர ஒரு நபருக்கு-4160/-மட்டுமே)

மேற்கண்ட முறையில்
மீண்டும் கோவாவிலிருந்து புதுக்கோட்டை வருவதற்கு
17310/வாஸ்கோடா காமா-யெஷ்வந்த்பூர் தினசரி ரயில்
➽ வாஸ்கோடா காமாவிலிருந்து(கோவா)- 10:25 மணிக்கு(வெள்ளி இரவு)புறப்பட்டு
➽ஹூப்ளி க்கு-03:50(சனி அதிகாலை) வரும்

அங்கிருந்து புதுக்கோட்டை வருவதற்கு
07356/ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்
➽ஹூப்ளியிலிருந்து- 06:30 am(காலை) புறப்பட்டு
➽புதுக்கோட்டை-01:03(சனி இரவு ஞாயிறு கணக்கில் வரும்) வந்து சேரும்.



இந்த முறையில் கோவா சென்று திரும்ப செல்ல புதுக்கோட்டை-ஹூப்ளி-புதுக்கோட்டை இடையே பயணிக்க, நமது புதுக்கோட்டை வழியாக இயங்கும் 07356/55 ராமேஸ்வரம்-ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயிலில் டிக்கெட் கிடைப்பது மிக மிக எளிது.

புதுக்கோட்டை மக்கள் பயன்படுத்தி பயன்பெறுவீர

குறிப்பு: திருச்சி வழியாக வாரத்தில் ஒரு நாள் மட்டும் செல்லும் வாஸ்கோ-வேளாங்கண்ணி-வாஸ்கோ ரயில் அவ்வளவு எளிதில் டிக்கெட் கிடைப்பதில்லை.

புதுக்கோட்டை-கோவா இணைப்பு ரயிலுக்கு ஒரே படிவத்தில் முன்பதிவு செய்வதற்கான மாதிரி முன்பதிவு படிவம்!

நேற்று நமது குழுவில் பதிவிட்ட புதுக்கோட்டை-கோவா-புதுக்கோட்டை இணைப்பு ரயில் அட்டவணைக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. சிலர் கேட்டதற்கிணங்க புதுக்கோட்டை-ஹூப்ளி-வாஸ்கோடகாமா(கோவா) இணைப்பு ரயிலை பயன்படுத்தி பயணிக்க எப்படி ஒரே முன்பதிவு படிவதில்(Reservation Form) இரண்டு ரயில்களுக்கு பூர்த்தி செய்து டிக்கெட் முன்பதிவு செய்வது என்று கேட்டிருந்தனர். அவர்களுக்கானதே இந்த பதிவு. இணைப்பு ரயிலுக்கு பூர்த்திசெய்யப்பட்ட மாதிரி முன்பதிவு படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு புதுக்கோட்டை-ஹூப்ளி இடையே பயணிக்க ஒரு வேளை 3rd AC பெட்டியில் முன்பதிவு செய்ய விரும்புகிறீர்கள் எனில் முன்பதிவு படிவத்தில் Class என்ற இடத்தில் Sleeper க்கு பதிலாக 3AC என எழுதிக்கொள்ளவும்.

இதே போல தான் வாஸ்கோடா காமா(கோவா)-ஹூப்ளி-புதுக்கோட்டை இணைப்பு ரயிலுக்கும் புதுக்கோட்டை வருதற்கும் சேர்த்து புதுக்கோட்டை ரயில் நிலையத்திலேயே ஒரே படிவத்தை பூர்த்தி செய்து டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

புதுக்கோட்டை-கோவா-புதுக்கோட்டை இணைப்பு ரயில் குறித்த விவரங்களுக்கு கீழ உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Source :Pudukkottai Rail users