வருகிறது கர்நாடகா மாநிலத்திற்கு புதுக்கோட்டையிலிருந்து முதல் நேரடி ரயில்!
கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் வரையிலான வாராந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஹூப்ளி-ராமேஸ்வரம்-ஹூப்ளி இடையே புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், பனஸ்வாடி(பெங்களூரு), யஷ்வந்த்பூர் வழியாக புதிய வாராந்திர சிறப்பு ரயில்!
வரும் ஆகஸ்ட் 06 சனிக்கிழமை முதல்,
07353/ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்(சனி மட்டும்)!

➧ஹூப்ளி- 06:30 am(காலை) புறப்படும் நேரம்
➧யஷ்வந்த்பூர்-02:45 pm(மதியம்)
➧பனஸ்வாடி(பெங்களூரு)-03:10 pm(மதியம்)
➧ஓசூர்-04:02 pm
➧தருமபுரி-04:52 pm
➧ஓமலூர்- 07:30 pm
➧சேலம் சந்திப்பு-07:55 pm(இரவு)
➧நாமக்கல்-08:45 pm
➧கரூர்-10:00 pm
➧திருச்சி-12:22 am
➧புதுக்கோட்டை-01:03 am(நள்ளிரவு)
➧ராமேஸ்வரம்-06:15 am(அதிகாலை) சேரும் நேரம்
———————————————————————
வரும் ஆகஸ்ட் 07 ஞாயிறுக்கிழமை முதல்
07354/ராமேஸ்வரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில்(ஞாயிறு மட்டும்)!
➧ராமேஸ்வரம்-09:00 pm(இரவு) புறப்படும் நேரம்
➧புதுக்கோட்டை-00:52 am(நள்ளிரவு)
➧திருச்சி-02:05 am
➧கரூர்-03:48 am
➧நாமக்கல்-04:19 am
➧சேலம் சந்திப்பு-05:45 am(அதிகாலை)
➧ஓமலூர்- 06:45 am
➧தருமபுரி-07:13 am
➧ஓசூர்-08:50 am (காலை)
➧பனஸ்வாடி(பெங்களூரு)-10:00 am(காலை)
➧யஷ்வந்த்பூர்-11:30 am
➧ஹூப்ளி- 07:25 pm(இரவு) சேரும் நேரம்
இந்த ரயிலில் 2 அடுக்கு AC(2AC)-1 , 3 அடுக்கு AC(3AC)-03, படுக்கை வசதி(SL)-09, Unreserved பெட்டிகள்-05, 2 luggage பெட்டிகள் என மொத்தம் 20 பெட்டிகளை கொண்ட ரயில்களாக இது இயங்கும்.

இனி சனி கிழமை பனஸ்வாடி, யெஷ்வந்த்பூர் (பெங்களூரு)லிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை வந்து மீண்டும் ஞாயிறு இரவு புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு திங்கள் காலை பனஸ்வாடி(பெங்களூரு), யெஷ்வந்த்பூர் செல்லலாம்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும்.
இந்த ரயிலுக்கான விரிவான தமிழில் அட்டவணை மற்றும் கட்டண விவரம் விரைவில் நமது குழுவில் பதிவிடப்படும்.
நாளை மறுநாள்(06/08/22) சனி கிழமை முதல் இயங்குவுள்ள
07353/ஹூப்ளி-ராமேஸ்வரம் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது!
கட்டணவிவரம்: படுக்கை வசதி(Sleeper)
➽ஹூப்ளி-புதுக்கோட்டை -₹580/-
➽யஷ்வந்த்பூர்(பெங்களூரு)-புதுக்கோட்டை- ₹385/-
➽பனஸ்வாடி(பெங்களூரு)-புதுக்கோட்டை-₹385/-
➽ஓசூர்-புதுக்கோட்டை-₹385/-
➽தருமபுரி-புதுக்கோட்டை-₹385/-
➽சேலம்-புதுக்கோட்டை–₹385/-

மேலும் இந்த ரயிலில் 3 அடுக்கு AC-03 பெட்டிகள், 2 அடுக்கு AC-01 பெட்டி உள்ளன. இவை தவிர 05 பொது(unreserved) பெட்டிகளும் உள்ளது.
சனிக்கிழமை மதியம் பெங்களூருவிலிருந்து புதுக்கோட்டை வர நினைப்பவர்கள் யஷ்வந்த்பூர் அல்லது பனஸ்வாடி ரயில்நிலையங்களிருந்து புதுக்கோட்டைக்கு நேரடியாக இரவு 01:03 மணிக்கு இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
