மீண்டும் கம்பன் எக்ஸ்பிரஸ்

706

மீட்டர் கேஜ் ரயில்பாதை இருந்த
போது கம்பன் எக்ஸ்பிரஸ்
சென்னை- திருவாரூர் -பட்டுக்கோட்டை- அறந்தாங்கி-காரைக்குடி -இராமேஸ்வரம் சென்று வந்த ரயில் அகலரயில்பாதை வேலைக்காக நிறுத்தப்பட்டது.

இப்போது அகலப் ரயில் பாதை வேலைகள் முடிந்து டெமி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

16வருடங்களுக்கு முன் இயக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இதே வழித்தடத்தில் இயக்க பட்டுக்கோட்டை மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இக்கோரிக்கைக்கு வழு சேர்க்கும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை பாராளுமன்ற உறுப்பினர்
சு.வெங்கடேசன் கம்பன் எக்ஸ்பிரஸை இயக்க கோரி ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்ப,ரயில்வே துறையும் பரிசீலிப்பதாக கடிதம் அனுப்பியுள்ளது.

மாற்று தொகுதி பிரச்சினையையும் புரிந்து கொண்டு முயற்சி எடுத்த மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு அறந்தாங்கி மக்கள் சார்பாக நன்றி