அறந்தாங்கி அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில் ‌மஹா கும்பாபிஷேக விழா!

323

ஆவணி மாதம் 23 ஆம் தேதி (08.09.2022) வியாழக்கிழமை
காலை மணி 11.00 க்குமேல் 11.55க்குள் நடைபெறும்.

அனைவரும் வருகை தந்து அம்மன் அருள் பெற்று. அன்னதானத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்..

முத்தமிழும் மூவேந்தர்களும் ஆண்ட தமிழகத்தில் நஞ்சையும். புஞ்சையும் கொஞ்சி விளையாடும் சோழமண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கி தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில், திருப்பெருந்துறைக்கு வடக்கிலும், திருச்சிற்றம்பலத்திற்கு மேற்கிலும், திருவரங்கத்திற்கு தெற்கிலும், வைகைக்கரையில் அமைந்து, முத்தமிழ் வளர்த்த திருஆலவாய்க்கு கிழக்காகவும், வளங்கொழிக்கும் நிலங்களும், அறம் சார்ந்த ஆன்றோர்களும், அழகும், வனப்பும் நிறைந்த, அறந்தாங்கி பெருநகரில் அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகி, அன்னை ஆதிபராசக்தியின் மகிமையினால் துஷ்ட, நிக்ரக, சிஷ்ட பரிபாலனத்தின் பொருட்டு, அனேக விதமான அவதாரங்களாக தோன்றி. அளவிடற்கரிய அருள்சுரந்து, ரட்சிக்கும் அன்னை பராசக்தி, இங்கு அருள்மிகு வீரமாகாளியம்மன் எனும் திருநாமத்துடன் அருள்பாலித்து வரும். இத்திருக்கோயிலை, திருப்பணி செய்து, திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற, கடந்த 3 ஆண்டுகளாக இத்திருகோயில் மண்டகப்படிதாரர்கள், அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் அறக்கட்டளை மற்றும் பொதுமக்களின் பெரும் முயற்சியாலும் ஒத்துழைப்புடனும், அன்னையின் அருளாலும், திருப்பணி வேலைகள் யாவும் இனிதே நிறைவு பெற்றுள்ளது.

நிகழும் மங்களகரமான ஸ்ரீ

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 23 ஆம் தேதி

(08.09.2022)

வியாழக்கிழமை, த்ரயோதசி திதி, திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை மணி 11.00 க்குமேல் 11.55 க்குள் விருச்சிக லக்னத்தில்

திருக்குட நன்னீராட்டு பெருவிழா

அதுசமயம் இறையன்பர்கள் குடும்பத்துடன் வருகை தந்து, திருக்குடமுழுக்கு பெருவிழாவை கண்டு அன்னையின் அருள்பெற்று, பேரானந்தப் பெருவாழ்வு பெற்றுய்ய அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு : அன்னதானம் நடைபெறும் இடம்
• அருள்மிகு வீரமாகாளி அம்மன் அன்னதான மண்டபம்
• அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில் வளாகம்
• அருள்மிகு ராஜேந்திர சோழிஸ்வரர் திருக்கோயில் வளாகம்
ஆகிய இடங்களில் மிக பிரம்மாண்டமாக அன்னதானம் நடைபெறும்.

இங்ஙகளம்:
அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் அறக்கட்டளை மற்றும் மாகாணத்தார்கள், மண்டகப்படிதாரர்கள் அறந்தாங்கி.