புதுக்கோட்டையில் பைக் மீது பஸ் மோதி 2 வாலிபர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்

1210

புதுக்கோட்டை நகர காவல் நிலையம் அருகே நடந்த விபத்தில் மோட்டார் பைக்கில் சென்ற இளைஞர்கள் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்தில் இருவர் உயிரிழந்தனர்.

நேற்று இரவு 11.30 மணி அளவில் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் புதுக்கோட்டை நகர காவல் நிலையம் அருகே கடந்த போது பெரிய கடை வீதியில் இருந்து வேகமாக வந்த பைக் மீது அரசு பேருந்து மோதி பைக்கில் பயணம் செய்த வடக்கு 3ம் வீதியை சேர்ந்த ரமேஷ் மகன் சீனிவாசன் என்கின்ற ஐயப்பன் வயது 27 மற்றும் மேல 4 ம் தேதியை சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்கருப்பன் என்கின்ற ராஜா வயது 29 ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

காவல்துறை ஆய்வாளர் குருநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.