விநாயகர் சதுர்த்தி முக்கிய கோவில்களில் சிறப்பு அலங்காரம்

311

பிள்ளையார்பட்டி கற்பகவினாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் இன்று 31.08.2022 புதன் கிழமை 10−ஆம் நாள் திருவிழாவில் காலை தங்கமூஷிக வாகனத்தில் ஶ்ரீ கற்பகவிநாயகர் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும்,
மதிய மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும்,இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு உச்சி பிள்ளையார் மற்றும் அடிவாரத்திலுள்ள மாணிக்க விநாயகருக்கு படைக்கப்பட்ட “150 கிலோ எடையுள்ள மெகா கொழுக்கட்டை”.

புதுவை மாநிலம் வில்லியனூர் அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இன்று மாலை 4 மணி அளவில் விநாயகர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்று ஸ்ரீ வலம்புரி விநாயகர் நான்கு மாத வீதியில் இளைஞர்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்..

பவுஞ்சூர் செல்வ விநாயகர் தங்க கவசம் தரிசனம்… 🙏

நெற்றிகண்ணுடன் செல்வ விநாயகர் அலங்காரம்

நெற்றி கண்ணுடன் விநாயகர் இருப்பிடம்
மலையில் புடைப்பு சிற்பமாக 4 அடி உயரத்தில்
அருள்பாலிக்கிறார்.
இடம்
ஜெகதேவி மலைக்கோட்டை கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை சாலையில் கிருஷ்ணகிரியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருமால் குளத்துக்கு எதிரே செல்லும் பாதையில் செல்லவேண்டும் 500 அடி உயரம் மலை ஏறவேண்டும்.

சிங்கம்புணரி சித்தர் அய்யாவின் இன்றைய அலங்காரம்….

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அருள்மிகு முக்குறுணிப் பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தி விழாவில்
இன்று கொழுக்கட்டை படையல்… 🙏

பேராவூரணி ஸ்ரீ நீலகண்டன் பிள்ளையார் கோயில்.

இலங்கை வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் 💐

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று இரவு பிள்ளையார் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை பின் மாடவீதி உலா

இதோ காட்சிதருகிறார் தங்க கவசத்தில்

சேலம் ஸ்ரீ ராஜகணபதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தங்க கவசத்தில் ஜொலிக்கும் காட்சி

பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர்தி திருக்கோயில் விநாய சதுர்த்தி திருவிழா 10ம் நாள் மாலை பஞ்சமூர்த்தி அலங்காரம்