புதுக்கோட்டை நகராட்சியின் இயல்பு கூட்டம்

382

புதுக்கோட்டை நகராட்சியின் இயல்பு கூட்டம் நகர்மன்ற தலைவி திலகவதி செந்தில் தலைமையில் துணை தலைவர் லியாகத் அலி ஆணையர் நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

கூட்டம் துவங்கியதும் நகர்மன்ற தலைவி திலகவதி செந்தில் நகரில் மேற்கொள்ளப்பட்டவரும் ஊசி கோபுர விளக்குகள் தடையற்ற குடிநீர் வினியோகம் தெரு விளக்கு மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பற்றி விளக்கி பேசினார்.

இதனைத் தொடர்ந்து திமுக அதிமுக மற்றும் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் காரசார விவாதம் செய்து பேசியதாவது

அப்துல் ரகுமான் என்கிற சேட்டு அதிமுக

பல்லவன் குளக்கரையின் ஒரு பகுதியில் பொதுக் கழிப்பிடம் கட்டப்பட வேண்டும் அங்கு தினந்தோறும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

பல்வேறு இடங்களில் தெரு விளக்குகள் முறையாக எரியவில்லை தெருவிளக்குகள் பொருத்துவதற்கான உயரமான லேடர் ஏணி பழுதடைந்து உள்ளது

தெருவிளக்கு பற்றிய வாட்ஸ் அப் புகார் எண் ஒழுங்காக வேலை செய்யவில்லை என தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பேசினார்


ஜே பர்வேஸ் விஜய் மக்கள் இயக்கம்

எனது வார்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் அமைக்கப்பட்ட மின்விசை இறைவன் திட்ட பலகையில் நகர் மன்ற உறுப்பினர் பெயர்கள் எழுதப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது அதில் தலைவர் துணைத் தலைவர் வட்டச் செயலாளர் என திமுகவைச் சார்ந்தவர்கள் பெயர்களே இடம் பெற்றுள்ளது இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை அவமரியாதை செய்வது போலாகும் என புகார் தெரிவித்து பேசினார்

ஜெயா கணேசன்
அதிமுக

எனது வார்டு பகுதியில் அமைக்கப்பட்ட மினி போர்பம்ப் திட்டத்தின் எனது பெயர் இடம்பெறவில்லை என குற்றம் சாட்சி பேசினார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர் பால்ராஜ் சந்தோஷ் கடந்த ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் எழுதப்படவில்லை நாங்கள் அப்பொழுது யாரிடம் புகார் தெரிவித்தோம் என மறுப்பு தெரிவித்து பேசினார்

இதனை தொடர்ந்து ஏற்பட்ட கருத்து முதலில் நகர்மன்றத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது

உடனே துணைத்தலைவர் லியாகத் அலி குறுக்கீட்டு நிச்சயம் நகர் மன்ற உறுப்பினர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மீண்டும் எழுத ஆவண செய்யப்படும் என்றார்



சுப சரவணன் திமுக

புதிய பேருந்து நிலைய கட்டிட கூரை இடிந்து விழுந்து உள்ளது எனவே புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியில் அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டு புதிய இடத்தில் புதிய பேருந்து நிலையத்தை திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்க வேண்டும்

கார்த்திக் மெஸ் மூர்த்தி

எனது வார்டு அமைந்துள்ள கீழ 2ம் வீதியில் தினமும் போக்குவரத்து வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனது வாடில் சாலைகள் போட்டு 10 வருடங்கள் ஆகிறது குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர்படுத்திட புதிய சாலைகள் அமைக்க வேண்டும்

துப்புரவு தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது இதனால் வார்டு முழுவதும் சுகாதார படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகிறது

இவ்வாறு உறுப்பினர்கள் காரசார வாதம் செய்தனர்