வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி வருகிற 28-ந்
தேதிமுதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி
வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி புதுக்கோட்டையில் இருந்து வழி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வேளாங்கண்ணிக்கும்,அங்கிருந்து புதுக்கோட்டைக்கும் மேற்கண்ட தேதிகளில் நேரங்களில் பகல் மற்றும் இரவு கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
மேலும் பஸ் நிலையத்தில் சேவை மையங்களும்
அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
