கார்ல்சனை கொண்டாடிய மீடியா!
ஓரமாக நின்ற பிரக்ஞானந்தா!
அடுத்து நடந்த ட்விஸ்ட்!

550

கிழே உள்ள படத்தை நன்கு கவனியுங்கள்

கார்ல்சனை கொண்டாடிய மீடியா!
ஓரமாக நின்ற பிரக்ஞானந்தா!
அடுத்து நடந்த ட்விஸ்ட்!

நியூயார்க்: கிரிப்டோ கோப்பை செஸ் தொடரில் இன்று உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாட்டு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றிபெற்றார்.

இந்த தொடருக்கு முன்பாக நடந்த சம்பவம் ஒன்றுதான் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவின் புளோரிடாவில் கிரிப்டோ கோப்பை செஸ் தொடர் நடந்து வருகிறது.

இந்த தொடர் செஸ் போட்டிகளில் முக்கியமான ஒரு தொடர் ஆகும். சர்வதேச அளவில் ரேங்கை உயர்த்திக்கொள்ள இது முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுகிறது.

இதில்தான் கார்ல்சன் வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ஆனால் அதே சமயம் இவர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவை எதிர்கொண்ட போட்டியில் அவரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

.இந்த தொடருக்கு முன்பாக நடந்த சம்பவம் ஒன்றுதான் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

இந்த தொடரில் கார்ல்சன் ஆடுகிறார் என்பதே அந்த போட்டி நடக்கும் இடம் முழுக்க பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

இன்று போட்டிக்கு முன் கார்ல்சனை பார்க்க ஏகப்பட்ட செய்தியாளர்கள் காத்து இருந்தனர்.

அவரின் ரசிகர்கள் பலர் காத்து இருந்தனர்.

ஏன் சக செஸ் வீரர்கள் கூட அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று காத்து இருந்தனர். இதனால் அவர் ஹீரோ போல அங்கே கவனிக்கப்பட்டார்.

அவர் நின்று கொண்டு இருந்த அதே காரிடாரில் இன்று பிரக்ஞானந்தாவும் நின்று கொண்டு இருந்தார். தன்னுடைய பயிற்சியாளருடன் பிரக்ஞானந்தா பேசிக்கொண்டு இருந்தார்.

கதவு ஓரம் இருந்த அவரை அங்கு இருந்த செய்தியாளர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. சக வீரர்கள் கூட சென்று விசாரிக்கவில்லை. செஸ் உலகில் பிரக்ஞானந்தா பிரபலம் என்றாலும்.. அவரை அடையாளம் காணாமல்.. இவர்கள் கார்ல்சனை மட்டும் பேட்டி எடுத்துக்கொண்டு இருந்தனர்.

பொதுவாக இளம் வீரரக்ளுக்கு இது போன்ற விஷயங்கள் பிரஷரை கொடுக்கும். இவ்வளவு பிரபலமான வீரரை நாம் எதிர்கொள்ள போகிறோமா என்ற பிரஷர் இவர்களுக்கு ஏற்படும்.

ஆனால் இன்று அந்த பிரஷர் எதுவும் இன்றி இயல்பாக ஆடினார் பிரக்ஞானந்தா. அதோடு எல்லோரும் வெற்றிபெறுவார் என்று நினைத்த கார்ல்சனை வீழ்த்தி அங்கு இருந்த மீடியாக்களை திரும்பி பார்க்க வைத்தார். எந்த மீடியா தன்னை கவனிக்கவில்லையோ அதே மீடியா முன் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றார். தன்னை யாரும் கண்டுகொள்ளாத போதும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரக்ஞானந்தா ஆடி வென்ற விதம் பலரையும் கவர்ந்தது

எதுவுமே இரண்டு முறை நடந்தால் அது சாதனை கிடையாது. அது வெறும் லக். ஒரு விஷயம் பழக்கமாக வேண்டும் என்றால் அது மூன்று முறை நடக்க வேண்டும் என்று கூறியவர் மேக்னஸ் கார்ல்சன். தற்போது அதே மேக்னஸ் கார்ல்சனை 3வது முறையாக வீழ்த்தி அவரை வெற்றிபெறுவதை “பழக்கமாக” மாற்றி இருக்கிறார் தமிழ்நாட்டு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா.

ஆம் என்னதான் கார்ல்சன் உலக சாம்பியனாக இருந்தாலும் இந்த வருடத்தில் மட்டும் மூன்றாவது முறையாக தமிழ்நாடு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவிடம் அவர் தோல்வி அடைந்துள்ளார்.