விசாரணை கைதி சின்னத்துரை உயிரிழப்பு

1174

புதுக்கோட்டை சிறையில் கைதி மரணம் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் விசாரணை கைதியாக அழைக்கப்பட்டிருந்த சின்னதுரை என்பவர் மரணம் சிறையில் சின்ன துறைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மரணம்

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கருப்பையா மகன் சின்னத்துரை மற்றும் துரைச்சாமி மகன் முருகப்பன் காரையர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்து வந்ததாக இரகசிய தகவல்களை அடுத்து இவர்களிடம் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட மேற்கண்ட பொருட்கள் சுமார் 77 கிலோவை காரையூர் காவல் துறையினர் அவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்து இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை சிறையில் கைதி மரணம்

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட சின்னத்துரை என்ற விசாரணை கைதிக்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டது அதனை அடுத்து புதுக்கோட்டை மாவட்ட சிறைத்துறை அதிகாரிகள் உடனடியாக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சின்னத்துரை இறந்துவிட்டதாக கூறியதை அடுத்து பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மாவட்டம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சின்னத்துரை உடல் வைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் இறந்த விசாரணை கைதியின் இறப்பிற்கு நீதி விசாரணை அவருடைய உறவினர்கள் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வந்தனர் இதன் இடையில் புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் திருமதி.ஜெயந்தி அவர்கள் தற்போது நீதித்துறையின் விசாரணைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பினவறையில் உள்ள சின்னத்துரை உடலை தற்போது ஆய்வு செய்து வருகிறார். நேரடியாக சின்னத்துரை உறவினர்களிடமும் தீவிர விசாரணையில் நீதித்துறை நடுவர் திருமதி ஜெயந்தி அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்..