வெப்பச்சலனம் காரணமாக தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி , தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் காற்று மற்றும் இடியுடன் கூடிய மிதமானது முதல் சற்று பரவலான கன மழைக்கு வாய்ப்பிருக்கிறது…
தென்சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது சென்னையில் இடியுடன் கூடிய பரவலான கனமழைக்கு தற்போது வாய்ப்பில்லை…
புதுச்சேரியிலும் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது இடியுடன் கூடிய பரவலான கனமழைக்கு தற்போது வாய்ப்பில்லை…
காரைக்கால் மாவட்டத்தில் இடியுடன் கூடிய பரவலான கனமழைக்கு தற்போது வாய்ப்பில்லை இன்று மாலை 3:45Pm மணிக்கு மேலாக பரவலாக காற்று மற்றும் இடியுடன் கூடிய மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது மேலான தகவலை பிறகு பதிவு செய்கிறேன்…
மயிலாடுதுறை மாவட்டத்தின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் தற்போது சற்று பரவலாக காற்று மற்றும் இடியுடன் கூடிய மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது மேற்கொண்டு அடுத்து மாவட்டத்தில் சற்று பரவலான கனமழைக்கும் வாய்ப்பிருக்கிறது மேலான தகவலை பிறகு பதிவு செய்கிறேன்…
திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் தற்போது ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது…
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் தென்தமிழகத்திலும் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது …