தங்கத்தை முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க மட்டுமே விரும்புபவர்களை இலக்காக வைத்து 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது தான் தங்கப் பத்திரத் திட்டம். இத்திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில், அதாவது நகையாகவே, நாணயமாகவோ வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி முதலீட்டிற்கான பலனை பெற முடியும்.
தங்கப் பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். ஒருவர் ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும், முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீத வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை முதலீட்டாளர் கணக்கில் செலுத்தப்படும். 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும்.
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பம் உடையவருக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாகும். இதற்கு விண்ணப்பிக்க பான் கார்டு கட்டாயமாகும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்டு ஆகியவற்றில் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தபால் நிலையத்தில் கொடுத்து தங்கப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்’
புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆக 22முதல் தங்கத்தில் முதலீடு செய்வதற்கானபத்திர திட்டம் துவங்கி ஆக 26வரை நடைபெறுகிறது என கோட்ட அஞ்சல்துறைகண்காணிப்பாளர் கு.தங்கமணி கூறினார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட
செய்திக் குறிப்பு.
இந்திய அஞ்சல் துறை புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் ஆர்பிஐ யின் தங்கபத்திர திட்டம் வரும் 22.08.2022 முதல் 26.08.2022 வரை நடைமுறையில் உள்ளது . இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஒரு கிராம் ரூ.5197/- என ஆர்பிஐ.நிர்ணயம் செய்துள்ளது. கூடுதலாக, முதலீட்டு தொகைக்கு ஆண்டிற்கு 2.5% வட்டியும் உண்டு.
மேலும் விவரங்களை அருகில் உள்ள அஞ்சலகங்களிலும் அல்லது 9865546641 என்ற அலைபேசி எண்ணிலும் அறிந்து கொள்ளலாம்.
சென்ற நிதியாண்டில் 171 வாடிக்கையாளர்கள் 2622 கிராம், தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர். எனவே இந்த அரிய வாய்ப்பை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.