பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு..

141

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல் ஜூன் மாத இறுதியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின.இந்நிலையில், காலாண்டு தேர்வு குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணையின்படி, 

மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியானது

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு; அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவற்றுக்காக விடுமுறை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

*6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

மீண்டும் அக்டோபர் 6ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.