ஆடு திருட்டில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து நபர்கள் கைது!

608

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, #ஆவுடையார்கோவில், மணமேல்குடி, மீமிசல், திருப்புனவாசல் பகுதிகளில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து நபர்கள் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கோட்டைபட்டிணம் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட ஆவணம் பெருங்குடி மற்றும் பேயாடி கோட்டை கிராமத்தில் தொடர்ந்து ஆடு திருடப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் கொடுத்துள்ளனர் இந்த தகவலின் பேரில் கோட்டைப்பட்டினம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கௌதம் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர் இதில் சந்தேகத்திற்கு இடமாக இந்த பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு நபர்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரனை செய்ததில் முன்னுக்குப் புறனாக பதில் கூறியுள்ளனர் பின்பு அந்த இரண்டு நபர்களை அழைத்து தீவிர விசாரணை செய்தபோது வேற மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் ஆடு திருடியவர்கள் என தெரியவந்துள்ளது

இதில் ராம்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் சரத் பாபு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா மோகன் மற்றும் ராமநாதபுரம் தாலுகாவை சேர்ந்த காளிதாஸ் ஆகிய ஐந்து நபர்களும் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டார்கள் என தெரியவந்தது அவரிடமிருந்து 53 ஆடுகளை கைப்பற்றி இந்த ஐந்து நபர்களை சிறையில் அடைத்துள்ளனர்.