சசிகலா தலைமையை நோக்கி ஆதிமுக நகர்கின்றது!!

280

சசிகலா தலைமையை நோக்கி அண்ணா திமுக நகர்கின்றது.

புதுக்கோட்டையில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் திமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

ரூபாய் 5,000 கோடி வரியை கார்ப்பரேட்டுகளுக்கு ரத்து செய்தது தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு கேடு. ஏழைகளுக்கு இலவச நலத்திட்ட உதவிகளை செய்வதல் கேடு விளைவது இல்லை.


பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தமிழகத்தில் மகாராஷ்டிரா போல் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகுவார் என கூறிய கருத்திற்கு பதில் அளித்தவர்,
பீகார் மாநிலத்தில் ஒரு ஏக் நாத் ஷிண்டே உருவாகிவிட்டார்.
ஆனால் தமிழகத்தில் அதுபோல் சாத்தியமில்லை.

நெல்லை கண்ணன் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் இடத்திற்கு வரவில்லை. ஆனால் அன்னை தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சத்தில் அகற்ற முடியாத இடம் அவருக்கு உண்டு.


நெல்லை கண்ணன் பட்டம் பெறாமல் பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல் கற்றறிந்த ஒரு பேராசிரியர்.

கம்பரையும் கண்ணதாசனையும் பாரதியையும் நெல்லை கண்ணன் அவர்கள் பேசி கேட்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் தவம்.

காந்தி குறித்தும் காமராஜர் குறித்தும் அவர் பேசினால் நம்மை ஒரு புதிய உலகத்திற்கு இட்டுச் செல்லும்.

அதீத திறமையும் ஆற்றலும் தமிழ்நாட்டின் அரசியலுக்கு அங்கீகாரம் பெறாது என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு என்றார்