புதுக்கோட்டை பிரகாகதாம்பாள் திருக்கோயிலில் நடந்த தேர் விபத்து – அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

1326

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் 6 பேர்களுக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணத் தொகையை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்

எதிர்பாராமல் நடந்த தேர் விபத்துக்கு வருத்தம் தெரிவிக்கின்றோம் தேர் விபத்து குறித்து மேலும் மேலும் பிரச்சினைகளை கிளப்ப வேண்டாம்.

பொதுப்பணி துறையினரின் முறையான அனுமதி பெற்று தான் தேரோட்டம் நடைபெற்றது இந்த விபத்தில் தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழகம் முழுவதும் கோயில்களில் தங்க வெள்ளி ரதம் உட்பட 947 தேரோட்டம் நடைபெற்று வருகிறது எல்லா தேர்களும் விபத்தில் சிக்குவதில்லை.

புதுக்கோட்டை தேர் விபத்து நிகழ்ந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பிகே.சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார் இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்து ராஜா அவர்களும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திருகேகே செல்லப்பாண்டியன் அவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கவிதா ராமு அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வந்திதா பாண்டே அவர்களும் திரு ஆ.செந்தில் அவர்களும் மற்றும் நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

தேர் திருவிழாவில் தேர் கவிழ்ந்து எட்டு பேர் சிறு காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நபர்களை நேரில் சென்று பார்வையிட்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 50,000 வழங்கிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே. சேகர் பாபு அவர்கள்..