இதில் இன்றைக்கு சுந்தரப்பெருமாள் கோவில் தாண்டி குடமுருட்டி ஆற்றுக்கு மேற்கே இருந்து வடக்கு மாங்குடி சுங்க சாவடி அமைய உள்ள இடம் வரை உள்ள பணிகள் குறித்து பார்ப்போம்.
மிச்சம் பணிகள் என்ன ஆனது என்றால், தஞ்சை முதல் இந்த வடக்கு மாங்குடி வரை பால பணிகள் நிறைவடைந்து விட்டது வெண்ணாறு மற்றும் வெட்டாறு பாலங்களுக்கு அணுகு சாலை அமைக்க மண் நிரப்ப வேண்டிய வேலை நடந்து வருகிறது. திட்டையில் அமைய உள்ள உயர்மட்ட பாலம் கும்பகோணம் நோக்கி உள்ள திசையில் வெட்டாறு பாலம் இணைந்தே வருகிறது, அங்கு மணல் நிரப்பும் வேலை மீதம் உள்ளது.
இந்த இரு பாலங்கள் தாண்டி earth work பணிகள் முன்பே நடந்து கொண்டு இருந்தது. அதனால் தஞ்சை முதல் வடக்கு மாங்குடி வரை உள்ள பாதை குறித்து கவலை அடைய தேவை இல்லை.
அதே போல தாராசுரம் முதல் சுந்தரபெருமாள் கோவில் தென் பாதி வரை உள்ள பணிகளில் சாலை பணிகள் நிறைவு அடைந்து உள்ளது. இரயில்வே மேம்பாலம் பணிகள் முடிந்து விட்டது, இப்போது இரு புறமும் அணுகு சாலை மீதம் உள்ளது. இந்த இரயில்வே மேம்பாலம் மற்றும் பழைய தஞ்சை சாலையில் குறுக்கே வரும் உயரமட்ட பாலத்திருக்கு இடையே தான் தாராசுரம் வழியாக புதிய தஞ்சை நான்கு வழி சாலை பயன்படுத்த நினைப்போருக்கு access Ramp ஏற்படுத்த பட உள்ளது.
இந்த தாராசுரம் – சுந்தாரபெருமாள் கோவில் தென்பாதி இடையே மீதம் உள்ள பணிகள் இந்த இரயில்வே மேம்பாலம் மற்றும் தென் பாதியில் உள்ள உயர்மட்ட பாலத்தின் அணுகு சாலைகள் மட்டுமே.
தென் பாதி உயர்மட்ட பாலத்தின் மேற்கு பகுதியில்( தஞ்சை மார்க்கம்) அணுகு சாலை அமைக்க மூன்று ஆற்று பாலங்கள் அமைக்க வேண்டி உள்ளது. திருமலை ராஜன், முடி கொண்டான் மற்றும் குடமுருட்டி ஆறுகள் உள்ளன. இவை மூன்றும் சிறிய ஆற்று பாலங்கள் ஆகவே காட்டப்பட்டு உள்ளது. அதுவும் “T” type construction முறையில் தான் அமைப்பார்கள் என்று தெரிகிறது. அதனால் ஆற்றில் தண்ணீர் நின்ற உடன் இந்த பணிகள் முடிந்து விடும்.
அடுத்ததாக இந்த மூன்று ஆற்றுக்கும் மறு பக்கம் நல்லூர் முதல் வடக்கு மாங்குடி வரை உள்ள பணிகள் பார்ப்போம்.
இதை இரண்டாக பிரித்து கொள்வோம். நல்லூர் முதல் பாபநாசம் வரையும், பாபநாசம் முதல் வடக்கு மாங்குடி வரையும் பார்போம்.
நல்லூர் முதல் பாபநாசம் வரை இரு மூன்று உயர்மட்ட பாலங்கள் வருகிறது. ஒன்று பாபநாசம் – வலங்கைமான் – குடவாசல் சாலை மீதும், பாபநாசம் – ஆவூர் சாலை மீதும் மற்றும் பாபநாசம் – சாலியமங்களம் மீதும் வருகிறது.
அதே போல இந்த பாபநாசம் – வலங்கைமான் – குடவாசல் சாலை மீது வரும் உயர்மட்ட பாலத்தில் தஞ்சை செல்லும் மார்க்கதில் உள்ள அணுகு சாலையில் மணல் நிரப்பும் பணி கிட்ட தட்ட முடிய போகிறது. அதே போல கும்பகோணம் செல்லும் மார்க்க அணுகு சாலையில் தான் மூன்று ஆறுகள் வருகிறது.
ஆவூர் – பாபநாசம் வரை உள்ள உயர்மட்ட பாலத்தில் இரு புறமும் மணல் நிரப்பும் பணி வேகமாக நடந்து வருகிறது.
பாபநாசம் – சாலியமங்களம் சாலை மீது வரும் உயர்மட்ட பாலத்தில் தஞ்சை செல்லும் வழியில் அணுகு சாலை பணி நிறைவடைந்து சாலை அமைத்து விட்டார்கள். கும்பகோணம் செல்லும் வழியில் ஒரு சிறிய பால வேலை நடந்து வந்தது. இப்போது அதுவும் முடிந்து விட்டது, அதனால் இந்த பக்கமும் விரைவில் அணுகு சாலை துவங்கும் என்றே தெரிகிறது.
மேலும் இந்த மூன்று உயர்மட்ட பாலங்கள் இடையே வரும் சாலை பணிகள் அனைத்தும் நிறைவு, பால அணுகு சாலை பணிகள் மட்டுமே மீதம்.
பாபநாசம் – வடக்கு மாங்குடி பிரிவு, இதில் தான் சிறப்பு கவனம் தேவை. கிலோ மீட்டர் 146.550 கிலோ மீட்டர் முதல் 149.912 கிலோ மீட்டர் வரை தான் மூன்று பெரிய பாலங்கள், ஒரு Vehicle under pass அணுகு சாலை என பணிகள் மீதம் உள்ளது. பாபநாசம் உயர்மட்ட பாலம் தாண்டி சாலை பணிகள் சிறிது தூரம் நடந்து உள்ளது. அதே போல் குறிப்பிட்ட கிலோ மீட்டர் பகுதியில் சில இடங்களில் சாலை பணி நடந்து உள்ளது.
ஒட்டு மொத்த தஞ்சை – கும்பகோணம் நான்கு வழி சாலை பணியும் இந்த 3 கிலோ மீட்டர் முடிவதை பொறுத்து தான் உள்ளது. இவ்வளவுக்கு காரணம் ஒரு சிறிய வடிகால் தான், பொய்கை எனப்படும் வடிகால் தான் இந்த புதிய நான்கு வழி சாலையை 8 முறை குறுக்கே கடக்கிறது.
முன்பு பார்த்தது விட பால பணிகள் சற்று துரித படுத்தி உள்ளது தெரிகிறது. அதனால் நம்பிக்கை உடன் இருக்கலாம்.
கும்பகோணம் புறவழி சாலை மற்றும் கொறநாட்டு கருப்பூர் புறவழி சாலை பணிகள் வரும் பதிவில் பார்ப்போம்.
செய்தி:தீபக்