சுதந்திர தின விழாவில் நற்சான்றிதழ்கள் வழங்கிய ஆட்சியர்..

699

புதுக்கோட்டையில் 75 ஆவது சுதந்திர தின விழா ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கவிதாராமு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்

அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே முன்னிலையில் போலீசார் வழங்கிய அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்

விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பல்வேறு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

மேலும் இறுதியாக பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற
கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

75வது சுதந்திர தின விழா புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றிய நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வழங்கினார்.