அறந்தாங்கி அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியல்!

403

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாங்குடி சேர்ந்தவர் மாதவன் இவர் பினாயில் வியாபாரம் பார்த்து வருகிறார் நேற்று வழக்கம் போல் இவர் வியாபாரத்திற்கு சென்றிருக்கின்றார்.

ஆவுடையார்கோவில் அடுத்த கானூர் முக்கத்தில எதிர்பாரத விதமாக எதிரே வந்த நான்கு சக்கர சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மாதவன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி ஆனார் அவரை வீட்டை காவல்துறையினர் உடலை உடல் கூறு ஆய்வுக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


நேற்று மாலை விபத்து நடந்துள்ளது ஆனால் தற்பொழுது வரை சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யப்படவில்லை என கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலைமறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர் இந்த சம்பவம் அறிந்த அறந்தாங்கி காவல்துறையினர் சாலை மறியல் செய்த நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கைது செய்யப்படும் என கூறியதால் சாலை மறியல் கைவிடப்பட்டது இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது