அழகியநாச்சியம்மன் கோவில் தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

575

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சி செல்லும் வழியில் உள்ள அழகியநாச்சியம்மன் கோவிலில் ஆடித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த ஆடி 15 ஜூலை 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டு நாள்தோறும் உபயதாரர்களால் மண்டாக்கப்படி நடைபெற்றது. பின்பு 10 நாள் திருவிழாவான இன்று ஆகஸ்ட் 9 செவ்வாய்க்கிழமை ஸ்ரீ அழகியநாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிசேகமும் ஆராதனையும் செய்யப்பட்டது. பின்பு அலங்கரிக்கப்பட்ட அம்மனை தேரில் வைத்து வான வேடிக்கையுடன் திரளான பொதுமக்கள் முன்னிலையில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற வேண்டி தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். தேர் செல்லும் முக்கிய வீதிகளில் பக்தர்களுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

இதில் கோவில் பரம்பரை தர்மக்கர்த்தா ராஜாஅம்பலகாரர், சேதுபதி அம்பலகாரர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் தேரோட்ட விழாவில் சுற்றியுள்ள ஊர்களான தொட்டியம்பட்டி, காமராஜர் நகர், ஜீவாநகர், நாட்டுக்கல், வலையப்பட்டி, பிடாரம்பட்டி, கொப்பனாப்பட்டி, மைலாப்பூர், பரியாமருதுபட்டி, கட்டையாண்டிபட்டி, வேலங்குடி, இந்திராநகர், புதுவளவு, மனப்பட்டி, காட்டுப்பட்டி, ஏனாதி, மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி உள்ளிட்ட ஏராளமான ஊர்களைச்சேர்ந்த பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

பொன்னமராவதி தீயணைப்புத்துறையினர், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ரகுராம் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Source : இளையராஜா அலகு