மின் கசிவினால் தீ விபத்து

341

புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்களை சந்தித்து எம்எல்ஏ முத்துராஜா ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நகராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் 14ஆம் வீதியில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது அறிந்து அந்த பகுதிக்கு விரைந்து பாதிப்பு குறித்து ஆய்வு செய்த. புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை. முத்துராஜா அவர்கள்


தீ விபத்தில் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி தீ விபத்தில் சேதமடைந்த அரசு ஆவணங்கள் உடனடியாக வழங்க ஆவணம் செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி மேலும் அரசு சார்ந்த உதவி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிகூறி நிதியுதவி வழங்கினார்.

உடன் நகர்மன்ற தலைவி திருமதி.செ திலகவதி செந்தில் அவர்களும், நகர்மன்ற துணைத் தலைவர் திரு.லியாக்கத்தலி அவர்களும், நகர்மன்ற உறுப்பினர், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்