சமயபுரத்தில் மாபெரும் விழாவான சித்திரை பெருந்திருவிழா வருகிற 10.4.2022 ஞாயிற்றுக்கிழமை முதல் 22.4.2022 வெள்ளிக்கிழமை வரையும் மற்றும் திருத்தேர் முடிந்து எட்டாம் திருநாள்(19.4.2022_ செவ்வாய்கிழமை நடைபெறும்.
(#சித்திரைபெருந்திருவிழாஅழைப்பிதழ்இணைத்துள்ளேன்)
கண்ணபுரநாயகியாம் நம் சமயபுரத்தாய் பச்சை பட்டினி விரத பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடமுள்ள சர்வசக்தியையும் பெற்று ஐந்து தொழில்களையும் பெற்று அதாவது #படைத்தல், #காத்தல், #அழித்தல், #மறைத்தல், #அருள்புரிதல்)
சித்திரை பெருவிழா நாட்களில் காட்சி தந்து தாய்மகமாயி அருள்புரிவது சமயபுர ஆலயத்தின் சிறப்பு.
#படைத்தல்_கொடியேற்றம் –10.4.22
#காத்தல்_ரிஷபவாகனம்
-13-4 -2022
#அழித்தல்_திருத்தேர் _19-4-2022
#மறைத்தல்_ஊஞ்சல்பல்லக்கு _21-4-2022
#அருள்புரிதல்_தெப்பம் –
22- 4 -2022
மேற்கண்ட திருவிழா நாட்களில் தாய் மகமாயி இரவு 8 மணிக்கு திருவீதி உலாவில் பக்த கோடிகளுக்கு காட்சி கொடுப்பாள்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
எப்பிறவியிலும் மகமாயியின் அன்புக்கு அடிபணிய ஏங்கும் கடைக்கோடி அன்பன்.
#முதல்_திருநாள்:
10.4.2022#ஞாயிற்றுக்கிழமை பங்குனி மாதம் 24ம் நாள்
காலை 6-30 மணிக்கு மேல் 8-00 மணிக்குள் #கொடியேற்றம்
இரவு 7-00 மணிக்கு #தாய்மகமாயிமரகேடயத்தில் வாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.
#இரண்டாம்திருநாள் :
11.4 .2022 திங்கள்கிழமை,பங்குனி மாதம் 25ம்நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8 – 00 மணிக்கு தாய்மகமாயி #மரசிம்மவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.
#மூன்றாம்திருநாள் :
12.4.2022 செவ்வாய்கிழமை,பங்குனி மாதம் 26ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8 – 00 மணிக்கு தாய் மகமாயி #மரபூதவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.
#நான்காம்திருநாள்:
13.4.2022 புதன்கிழமை,பங்குனி மாதம் 27ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு தாய்மகமாயி
#அன்னவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.
#ஐந்தாம்திருநாள் :
14-4-2022 வியாழக்கிழமை,பங்குனி மாதம் 28ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு தாய்மகமாயி
#ரிஷபவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.
#ஆறாம்திருநாள் :
15.4.2022 வெள்ளிக்கிழமை,பங்குனி மாதம் 29ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு யானை வாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.
#ஏழாம்திருநாள் :
16.4 .2022 சனிக்கிழமை,பங்குனி மாதம் 30ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு தாய்மகமாயி
#சேஷவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.
#எட்டாம்திருநாள்:
17.4.2022ஞாயிற்றுகிழமை, சித்திரை மாதம் 1ம் நாள்
காலை 10-00 மணிக்கு தாய் மகமாயி பல்லக்கில் புறப்பட்டு வழி நடை உபயங்கள் கண்டருளி பகல் 12.00 மணிக்கு இனாம் சமயபுரத்தில் அருள் புரியும் தன் தாய் வீடான ஆதி மாரியம்மன் திருக்கோவில் சென்றடைவாள்.
மறுநாள் அதிகாலை(15.4.19) திங்கள்க்கிழமை சிறப்பு அபிஷேகம் கண்டருளி அதிகாலை 6.00 மணிக்கு #மரகுதிரைவாகனத்தில் புறப்பட்டு
வழிநடை மண்டகபடி உபயங்கள் கண்டருளி காலை 10.00 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைவாள்.
#ஒன்பதாம்திருநாள் :
18.4.2022 திங்கள்கிழமை,சித்திரை மாதம் 2ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
வருடத்திற்க்கு ஒருநாள் மட்டுமே புறப்பாடு ஆகும் ஆயிரம் கண்ணுடையாள் இரவு 8.00 மணிக்கு வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வழி நெடுகிலும் இரவு விடிய விடிய மண்டகபடி உபயங்கள் கண்டருளி
மறுநாள் 20-4-2022 செவ்வாய்கிழமை காலை 7-00 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைவாள்.
#பத்தாம்திருநாள்
19-4-2022 செவ்வாய்கிழமை,சித்திரை மாதம் 3ம் நாள்
உலகிலுள்ள ஜீவராசிகளை காக்கும் பொருட்டு உலகநாயகியாம் நம் சமயபுரத்தாள் காலை 10-30 மணிக்கு மேல் 11-30 மணிக்குள் மிதுன லக்னத்தில் #திருத்தேர் வலம் வந்து பக்தகோடிகளுக்கு அருள்காட்சி தருகிறாள்.
இரவு 9-00 மணி அளவில் தாய் மகமாயி திருத்தேரிலிருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் வந்தடைவாள்.
#பதினொன்றாம்திருநாள் :
20-4-2022 புதன்கிழமை,சித்திரை மாதம் 4ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8 – 00 மணிக்கு வெள்ளி #காமதேனு வாகனத்தில் புறப்பட்டு
வழிநடை மண்டகபடி உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் வந்தடைவாள்.
#பன்னிரென்டாம்திருநாள் :
21- 4 – 2022 புதன்கிழமை,சித்திரை மாதம் 5ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு #முத்துப்பல்லக்கு வாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.
#பதிமூன்றாம்திருநாள்:
22- 4 – 2022 வியாழக்கிழமை,சித்திரை மாதம் 6ம் நாள்
நண்பகல் 12.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.
#திருத்தேர்முடிந்துஎட்டாம்திருநாள் :
26.4.2022 செவ்வாய்கிழமை,சித்திரை மாதம் 10ம் நாள்,திருத்தேர் முடிந்து எட்டாம் திருநாள்
மாலை 5.00 மணிக்கு திருக்கோயிலில் அபிஷேகம் கண்டருளி
இரவு 7- 00 மணிக்கு தங்க கமலவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.
அனைவரும் வருக தாய்மகமாயி அருள் பெருக .