96 வகையான ஷண்ணவதி
ஹோமங்களின் ரகசியம்

364

எந்த யாகம் செய்தால் என்ன பலன்

பல்வேறு வகையான யாகங்கள் உள்ளன. அவற்றில் எந்த வகையான யாகத்தை செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம். காரிய சித்திக்கு – கணபதி யாகம். க்ரஹ ப்ரீதிக்கு – நவக்ரஹ யாகம். ஐஸ்வர்யத்துக்கும், தனப்ராப்திக்கும் – மஹா லக்ஷ்மி யாகம். ஆயுள் விருத்திக்கு – அமிருத முருத்யுஞ்ஜய யாகம். ஆரோக்கியமான வாழ்விற்கு – ஆயுர்தேவதா,மற்றும் ஆயுஷ்ய ஹோமம். சத்ரு உபாதைகள் நீங்க – சுதர்சன யாகம் மற்றும் சத்ரு சம்ஹாரயாகம். கல்விக்கு – மஹா சரஸ்வதி யாகம், மற்றும் ஹயக்ரீவர் யாகம். செய்வினை, மாந்ரீக வினை நீங்க – ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி யாகம். சகல காரிய வெற்றிக்கு – மஹா சண்டி யாகம். பித்ரு தோஷம் நீங்க – தில ஹோமம் நாக தோஷம் நீங்க – சர்ப சாந்தி. திருமண தடை நீங்க – ஹரித்ரா கணபதி யாகம். ஆசைகள் பூர்த்தி அடைய – வாஞ்சா கல்ப கணபதி யாகம். புத்ர சந்தானம் கிடைக்க – புத்ர காமேஷ்டி யாகம். சகல தோஷமும் நீங்கி நலமடைய – ஸ்ரீ.ருத்ர யாகம். அம்பிகை அருள் பரிபூர்ணமாக கிடைக்க – ஸ்ரீ.வித்யா யாகம். ஆபத்து,விபத்துகள் அகல – அஸ்த்ர ஹோமம். – தகுந்த ஆசார்யர்களை கொண்டு செய்தால் நிச்சயம் பலன் உண்டு என்பது பல சமயம் நிருபிக்கப்பட்ட உண்மை…(1)சமித்துவகைகள் _13
(2)ஹோமதிரவியம் _45
(3) ரஸவர்க்கம். _8
(4) பழவர்க்கம். _7
(5) கிழங்கு வகையறா_5
(6) உலோகம் _2
(7) வாசனாதிரவியம் _5
(8) அன்னவர்க்கம் _ 4
(9) பக்ஷ்யம். _5
(10) பட்டுவஸ்திரம் _1
(11) தாம்பூலம் _1

மொத்தம்_ (96)

இதன் விளக்கம்.
===============

(1) 13:சமித்து
———————–
அரசன், ஆல், அத்தி, முருங்கை, கருங்காலி, சந்தனம், மா, மூங்கில், வன்னி, வில்வம், எருக்கன், பலா, பாதிரி சமித்து மேற்கண்ட சமித்தை தவிர வேற எந்த சமித்தும் ஹோமத்தில் போடக்கூடாது…

(2) 45:ஹோம திரவியம்
—————————————
அரிசி மாவு, மூங்கில் அரிசி, வெல்லம்,
பச்சை கற்பூரம், நாட்டுச்சக்கரை, சத்துமாவு, பேரிச்சை, வால்மிளகு, வலம்புரிக்காய், இடம்புரி காய், மாசிக்காய், நாயுருவி, சீந்தில்கொடி, நெல்லி வத்தல், வெள்ளறுகு, சுக்கு , ஜட மஞ்சரி, களிப்பாக்கு, ஓமம், அகில்_குகில், அதிமதுரம், செண்பக மொட்டு, வெட்டி வேர் , ரோஜா மொட்டு, கிராம்பு, கோரோஜனை, அவல், நெல்லு பொரி, கொப்பரை தேங்காய், குங்குமம், விரளிமஞ்சள், வங்காளமஞ்சள், கஸ்தூரிமஞ்சள், கோதுமை, காராமணி, துவரை, பயறு, கருப்பு கொண்டை கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, இந்த 45 பொருட்கள் மட்டுமே…..

(3) 8:ரஸ வர்க்கம்
—————————–
நெய், பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், வெண்ணெய், சந்தனாதிதைலம்,

(4) 7:பழ வர்க்கம்
—————————-
வில்வம் பழம், பலாபழம், திராட்சைபழம் ,
அன்னாசிபழம், மலைப்பழம், விளாம்பழம், மாம்பழம்.(5) 5:கிழங்கு வகையறா
——————————————-
சக்கரவள்ளி, சேப்பங்கிழங்கு,
கருணை கிழங்கு, தாமரை கிழங்கு நீலோத்பல கிழங்கு, கரும்பு

(6) 2:உலோகங்கள்
———————————
ஸ்வர்ணம், வெள்ளி

(7) 5:வாசனாதிரவியம்
—————————————-
ஜாதிபத்திரி, ஜாதிக்காய், ஏலக்காய், புனுகு, ஜவ்வாது,

(8) 4:அன்னவர்க்கம்
———————————–
சக்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம்

(9) 5:பக்ஷ்யம்
————————-
லட்டு, பாயசம், வடை, அப்பம், மோதகம்

(10) பட்டு வஸ்த்திரம்.

(11) தாம்பூலம்

மேற்கண்ட பொருட்கள் அனைத்து ஹோமத்திலும் அவசியம் பயன் படுத்த பட வேண்டியவை…

ஒருசில யாகத்தில் சில பொருட்கள் மாறும் ….

ஹோம நெறிகளை கடைபிடிக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், ‌நீங்கள் ஹோமம் செய்யும் பொழுது 54,108 ஹோம திரவிய பொட்டலம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதில் உள்ளதில் பல பொருட்கள் பூஜைக்கு கிடையாது. தயவுசெய்து நீங்கள் செய்ய கூடிய பூஜை பயன்உள்ளதாக அமைய மேற்கண்ட பொருட்கள் பயன்படுத்துங்கள்.